ஒவ்வொரு சூழல் மற்றும் நிகழ்வுகளில் எடுத்த எடுப்பிலேயே சில விஷயங்கள் எல்லாம் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். முக்கியமாக எதிர் பாலின நபர்களிடம்.
முதல் முறை பார்த்தவுடன் மொபைல் எண் கேட்பது, மெசேஜ் கான்வர்சேஷன் துவங்கிய முதல் நிகழ்விலேயே பிடித்த கலரில் ஆரம்பித்து, லவ் லைப் வரை அறிந்துக் கொள்ள முனைவது என இப்படி பலவன கூறலாம்.
இப்படி சில “முதல் முறை” விஷயங்களை ஆண்கள் செய்தால் செம்ம கடுப்பாகும் என பெண்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்…
லைக்ஸ்!
ஃபிரென்ட்ஷிப் ரெக்வஸ்ட் அக்சப்ட் செய்வதே பெரியது. அக்ஸப்ட் செய்தவுடன் வந்து ப்ரோஃபைல் பிக்சருக்கு லைக் போடுங்கள் என மெசேஜ் செய்வது செம்ம கடுப்பாக செய்யும். அப்பறம் என்ன உடனே பிளாக் தான்.
பெரும்பாலான ஆண்கள் இதை வாழ்வில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பார்கள். சிலர் தெரிந்தே செய்வார்கள், சிலர் பழக்க தோஷத்தில் செய்துவிடுவார்கள்.
பெரும்பாலான பெண்களுக்கு ஏனோ டி போட்டு அழைத்தால் பிடிப்பதில்லை. ஆனா ஒரு டவுட்டு அப்பறம் நீங்க மட்டும் பசங்கள டா போட்டு கூப்பிடறீங்க…?
அவங்ககூட சேராத…
நட்பான புதியதில், “அவங்க எல்லாம் சரி இல்ல, மோசமான பசங்க… அவங்க கூட எல்லாம் சேராத…”, “ஆமா நீ ஏன் இப்படி எல்லாம் டிரஸ் பண்ற, எனக்கு பிடிக்கவே இல்ல… மாத்திக்க…” என பேசும் ஆண்களிடம் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும் என தோணும் என்கிறார்கள்.
தங்கச்சி மாதிரி…
டார்லிங் என கூப்பிடும் ஆண்களை கூட நம்பிவிடலாம். எடுத்தவுடன் தங்கச்சி என கூறி பேசும் ஆண்களை தான் நம்ப முடியாது. சிலர் நண்பர்களுக்கு தூதுவர்களாக வருவார்கள், சிலர் தங்கச்சி என கூறிவிட்டு வெட்கமே இல்லாமல் கொஞ்ச காலம் கழித்து ப்ரபோஸ் செய்வார்கள்.
இப்படி எல்லாம் செய்வதால் தான் நிஜமாகவே சகோதர பாசத்தில் பழகும் ஆண்களையும் சந்தேகத்துடன் காண வைக்கிறது., என பெண்கள் கூறுகிறார்கள்.
எக்ஸ் லைஃப்!
பெண் பார்க்க வரும் போது அல்லது நிச்சயமானவுடன் சில ஆண்கள், உனக்கு எதாவது எக்ஸ் லைப் இருக்கா? என முதல் கேள்வியாக கேட்பார்கள். இது கொஞ்சம் கடுப்பாகும். வேறு கேட்க எதுவுமே இல்லையா? இதே கேள்வியை நாங்கள் கேட்டால் எப்படி இருக்கும்.
மனதளவில் கூட வேறு ஆணை திருமணத்திற்கு முன் நேசிக்காமல், ஈர்ப்பு அடையாமல் ஒரு பெண் வேண்டும் என்றால் வேறு கிரகத்தில் தான் தேட வேண்டும். அதுவும் ஆண்கள் இல்லாத கிரகமாக இருக்க வேண்டும்.
செக்ஸ்!
திருமணதிற்கு முன்பே செக்ஸ் சாதாரணம் என்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆயினும் திருமணமான முதல் இரவிலேயே செக்ஸ் என்பது வேண்டாம் என சில பெண்கள் கருதுகிறார்கள்.
உண்மையில் தெரியாத நபருடன் ஆரம்பத்திலேயே எப்படி என்ற காரணம் ஒரு பக்கம் இருப்பினும். நாள் முழுக்க கல்யாண சடங்குகளில் சோர்ந்து போய் இருக்கும் சூழலில் அன்றிரவே வேண்டுமா? என்பது தான் முக்கிய காரணம் என பெண்கள் கூறுகிறார்கள்.
சிம்பத்தி!
ஆண்கள், கேட்காமலேயே.., அதற்கான சூழல் உருவாகாமல், அவர்களாக தங்கள் எக்ஸ் லைப் பற்றி கூறுவது, சிம்பத்தி கிரியேட் ஆவது போல பேசுவது போன்றவை கொஞ்சம் எரிச்சல் அடைய செய்யும். இதை முதல் சந்திப்புகளிலேயே பேசுவதை தவிர்க்க வேண்டும், என பெண்கள் கூறுகிறார்கள்.
மொபைல் எண்!
இது ஆண்களுக்கே தெரியும், ஆனால் காலம், காலமாக தொடர்ந்து தவறாமல் செய்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது எடுத்த எடுப்பில் முதல் சந்திப்பிலேயே மொபைல் நம்பர் கேட்பது அநாகரிகமான செயல்.
வயசு, சம்பளம்!
உங்க வயசு என்ன, எவ்வளோ சம்பளம் போன்ற கேள்விகள் முதல் சந்திப்பில் தவிர்க்க வேண்டிய கேள்விகள். இது ஒரு நபர் மீது எதிர்மறையான கருத்துக்கள் அதிகரிக்க கருவியாக மாறலாம்.
கேள்விகள்!
மெசேஜில் பேச ஆரம்பித்த முதல் கான்வர்சேஷனிலேயே, “உங்களுக்கு பிடிச்ச கலர் என்னன்னு தொடங்கி, லவ் லைப், உங்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பது கடுப்பாக்கும் என பெண்கள் கூறுகிறார்கள்