நமக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே திரைப்படங்களில் வரும் முதலிரவுக் காட்சிகளில் பால் சொம்பையும் அலங்கரிக்கப்பட்ட மெத்தையையும் குறியீடாகக் காட்டுவதுண்டு.
அதற்குக் காரணம் என்ன? ஏன் பால் சொம்புடன் முதலிரவு தொடங்கப்படுகிறது என்று நாம் யோசித்துப் பார்த்ததே இல்லை.
எவ்வளவு தான் கால மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் இன்றைக்கும் முதலிரவு பால் சொம்புடன் தான் தொடங்குகிறது. அதில் மட்டும் எந்த மாற்றமும் உண்டாகவே இல்லை.
நம்முடைய சடங்கு முறைகளில் பால் அருந்துவது புனிதமாகக் கருதப்படுகிறது. பால் உடலை சுத்தப்படுத்துவதற்கான கருவியாகக் கருதப்படுகிறது.
இல்லற வாழ்க்கையைத் துவங்கும் இடமாக கருதப்படும் முதலிரவு இருப்பதால் அப்போது பால் அருந்தித் துவங்கினால் அந்த உறவு தூய்மையானதாகத் தொடங்கப்படுகிறது என்று அர்த்தம்.
ஆதிகால மனிதன் செய்த தொழில் விவசாயம். இது அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கியது. அந்த விவசாயத்துக்கு உதவிய பசுவை தெய்வமாகவே வழிபட்டனர்.
சாணம் கிருமி நாசினியாகவும் பால் ஆரோக்கியமும் தந்தது. அது அவர்களுக்குப் பொருளீட்டவும் பயன்பட்டது.
அதனால் பசுவும் அதன்மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டமாகக் கருதப்பட்டதால் முதலிரவில் பாலுடன் ஆரம்பிக்கும்போது, வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்று கருதப்பட்டது.
உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலுக்குப் புத்துணர்ச்சி தருவது பால். உடலில் உள்ள சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாகும்.
பாலில் உள்ள அமினோ அமிலம் உடலை இலகுவாக வைத்திருக்க உதவும். இதுவே முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.
பாலில் மஞ்சள் மற்றும் குங்குமப்பூ கலந்து பருகுவதால் உணர்வுகளைத் தூண்டும் தன்மையுடையது. அதனால் தாம்பத்யம் சிறக்கும். பால் பருகுவதால் உடல் சூடும் குறைகிறது. அதனாலேயே முதலிரவை பாலுடன் தொடங்குவது ஒரு கட்டாயச் சடங்காகவே பின்பற்றப்பட்டு வருகிறது.