முருங்கைக்காய் அந்த சமாச்சாரங்களுக்கு கை கொடுக்கக் கூடியது என்பது நமக்கு தெரிந்தது தான். ஆனால் அதை எப்படி, எந்த வடிவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அதன் செயல் தீவிரமும் இருக்கும். அந்த வகையில் மிகுந்த பலன் தரக்கூடிய ஒரு வகை தான் இந்த முருங்கைக்காய் ஊறுகாய்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 5
நல்லெண்ணெய் – 100 மி.லி.
மிளகாய் வற்றல் – 2
எலுமிச்சை பழம் – பாதியளவு
மஞ்சள் பொடி – சிட்டிகை
பெருங்காயப்பொடி, தனிவத்தல் பொடி, கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிய பின், தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் விலக்கி, அதன் சதைப்பாகத்தை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்து வைக்கவும்.
அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், காரத்துக்குத் தேவையான மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
மஞ்சள், வத்தல்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்த கலவையை வாணலியில் இடவும்.
நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில், தேவையான அளவு எலுமிச்சைச்சாறு கலக்கவும்.
இப்போது சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் தயார்