Home ஆரோக்கியம் இரவில் மூக்கடைப்பால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ அதற்கான சில நிவாரணிகள்!

இரவில் மூக்கடைப்பால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ அதற்கான சில நிவாரணிகள்!

31

இயற்கை வழியில் மூக்கடைப்பைப் போக்க ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

குளிர்காலத்தில் பலர் மூக்கடைப்பால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். மூக்கடைப்பு பிரச்சனைக்கு பலரும் விக்ஸ், தைலம் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்பழக்கம் அப்படியே நீடித்தால், அது அப்படியே அடிமையாக்கிவிடும்

ஆகவே இயற்கை வழியில் மூக்கடைப்பைப் போக்க ஒருசில இயற்கை நிவாரணிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

நிவாரணி #1 சீமைச்சாமந்தி பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதிலிருந்து வெளிவரும் ஆவியை நுகர்ந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நிவாரணி #2 க்ரீன் டீயை தேன் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், சுவாசப் பாதையில் இருக்கும் அழற்சி நீங்கி, மூக்கடைப்பு நீங்கும்.

நிவாரணி #3 பசலைக்கீரை மற்றும் முட்டைக்கோஸால் தயாரிக்கப்பட்ட காய்கறி ஜூஸை தினமும் சிறிது என 10 நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கலாம்.

நிவாரணி #4 வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலமும் மூக்கடைப்பைத் தடுக்கலாம்.

நிவாரணி #5 மிளகைக் கொண்டும் மூக்கடைப்பைப் போக்கலாம். அதற்கு ஒரு மிளகை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், உடனே மூக்கடைப்பு நீங்கும்.

நிவாரணி #6 இஞ்சி, பூண்டு போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியைத் தடுத்து, மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.