Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பருவை இவ்வளவு ஈஸியா போக்கிடலாம்…

முகப்பருவை இவ்வளவு ஈஸியா போக்கிடலாம்…

27

முகப்பருக்கள் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய பொதுவான விஷயம் தான். பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு இந்த பிரச்னை வருவதுண்டு. அதிலும் குறிப்பாக, பெண்களுக்குத் தான் இது மிக அதிகமாக இருக்கும். சரியான தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் ஆகியவையே முகப்பருக்கள் உண்டாவதற்கான காரணங்களாக அமைகின்றன. இவற்றை வீட்டிலேயே மிக எளிதாக சரிசெய்துவிட முடியும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்

ஒரு சிறிய வெள்ளரிக்காயை எடுத்துக் கொண்டு, அதனுடன் ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். இந்தப் பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போடவும். அரைமணி நேரம் முகத்தில் காயவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.

ஆரஞ்சு மாஸ்க்

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரைச் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். இதை வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பருக்கள் தொல்லை நீங்கும்.

கற்றாழை மாஸ்க்

கற்றாழையைத் தோல் சீவி விட்டு, பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவவும். கற்றாழை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, முகப்பருக்களைப் போக்கும். சருமத்தில் உள்ள தழும்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் படைத்தது கற்றாழை.

சுகர் ஸ்கிரப்

சருமத்தில் உள்ள பருக்களை விரட்ட மிக எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளுள் ஒன்று தான் இந்த சுகர் ஸ்கிரப். இது முகத்தைப் பளபளப்பாக்கும். மூன்று ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு ஸ்பூன் பால் பவுடரும் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அதை முகத்தில் தடவி நன்கு தேய்த்து, 15 நிமிடங்களுக்கு ஊற விட்டு, முகத்தைக் கழுவவும்.

இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் முகப்பருக்கள் நீங்குவதோடு, சருமம் பளபளப்பாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.