Home பெண்கள் அழகு குறிப்பு முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

30

captureஅந்த காலத்தில் பெண்கள் மஞ்சள் போடாமல் வெளியே வரமாட்டார்கள். அது கலாச்சாரம் என்று சொன்னாலும் உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு.

கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். வெடிப்புகள் வராமல் பாதுகாக்கும். பாலில் மஞ்சளை குடிந்து தினமும் குடித்தால், நோய்கள் அண்டாது. மேலும் இதனால் சரும அழகும் அதிகரிக்கும் என்பது தெரியுமா?.

இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போலில்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெயிலில் அலைய வேண்டியதாகிறது.

வெயிலில் செல்வதால் கருமை உண்டாகும் என்ற காரணங்கள் ஏற்புடையதாக இருந்தாலும், அதனை உபயோகப்படுத்தாமலே இருப்பதும் தவறு. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும்.

அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம் :

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 3 டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 20 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது.

வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.