முட்டைக்கோஸ் பிரியாணி எவ்வாறு செய்யலாம் எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 1/2 கிலோ
நெய் 1/4 கப்
தயிர் – 1 கப்
இஞ்சி – 1 அங்குலம்
பூண்டு – 1
புதினா – 12 கட்டு
கிராம்பு 8
கல்பாசி – 1
ஏலக்காய் – 8
எலுமிச்சை – 1
வெங்காயம் – 2
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பாசுமதி அரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 8
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
முட்டைக்கோஸை ஒரங்குலத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் நீள வாட்டில் மெல்லிதாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டு தோல் நீக்கி அரைக்கவும்.
ஏலக்காய், கல்பாசி, கிராம்பு பொடித்துக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியைக் கழுவி நீர் வடியவிட்டு பத்து நிமிடம் வைக்கவும்.
பிரஷர் பேனில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு வதக்கவும். நல்ல மணம் வரும் போது பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். வதங்கியவுடன் அரிசியை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி கடைந்த தயிர் 1 கப்பும் தண்ண் முக்கால் கப்பும் விடவும். உப்பு சேர்க்கவும்.
பேனில் வெயிட் போடாமல் பத்து நிமிடம் கழித்துத் திறந்து நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து வெயிட் போடவும். மூன்று விசில் வந்ததும் சிம்மில் வைக்காமல் ஸ்டவை அணைத்து விடவும். சூடு குறைந்ததும் எடுத்து சிறிது பாலில் கரைத்த குங்குமப்பூ, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு,ஆய்ந்த புதிளா சேர்த்து திரும்பு பானை மூடி விடவும்.
இப்போது மிகுந்துள்ள நெய்யில் ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை தாளித்துச் சேர்த்துக் கிளறி குருமா, பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும். ருசியாக இருக்கும்.