பாசத்தால் முத்தமிடுவார்கள், காதலால் முத்தமிடுவார்கள், காமம் அதிகரித்தாலும் முத்தம்தான். சின்ன முத்தமோ, பெரிய முத்தமோ, முத்தமிடுவது என்பது நமது பாசத்தையும், அன்பையும், வேட்கையையும் வெளிப்படுத்த உதவுவதாகும்.
முத்தம் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. உறவுகளை வலுப்படுத்த மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் முத்தம் உதவுகிறதாம். உடல் எடையைக் குறைக்கவும் கூட முத்தம் கை கொடுக்கிறதாம். முத்தம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போமா..
– ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் காலியாகிறதாம். எனவே நிமிடங்களின் எண்ணிக்கை கூடும்போது கலோரிகளின் எண்ணிக்கையும் கூடி உடல் எடையில் கணிசமாக குறைக்க வாய்ப்பு உள்ளது.
– முத்தமிடும் ஆண்களில் 37 சதவீதம் பேர்தான் முத்தமிடும்போது கண்களை திறந்து வைத்துக் கொண்டு கொடுக்கிறார்களாம். 97 சதவீதம் பேர் குளோஸ் பண்ணி விடுகிறார்களாம் கண்களை.
– முத்தமிடும்போது, பெண்களுக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்று தோன்றுமாம்.
– ஒரே நிறத்தில் இருக்கும் ஆணும், பெண்ணும் முத்தமிட்டுக் கொள்ளும்போது அதில் காதல் நிரம்பி வழியுமாம். குறிப்பாக இவர்கள் லிப்லாக்கில்தான் அதிகம் ஈடுபடுவார்களாம்.
– எகிப்தியர்கள் பொதுவாக உதடுகளால் முத்தமிட்டுக் கொள்ள மாட்டார்கள். மாறாக மூக்குடன் மூக்கு உரசித்தான் முத்தமிடுவார்கள்.
– ஆரம்ப கால இத்தாலியில், எந்த ஜோடியாவது முத்தமிடும்போது பிடிபட்டு விட்டால் உடனே பிடித்து கல்யாணம் செய்து வைத்து விடுவார்களாம்.
– முத்தமிடுவதால் முகத்தில் சுருக்கம் வருவது தடுக்கப்படுகிறதாம். காரணம், முத்தமிடும்போது முக தசைகள் நன்கு செயல்படுவதால் சுருக்கம் தடுக்கப்படுகிறதாம்.
– ஜப்பான், கொரியா, சீனா, தைவானில் பொது இடங்களில் முத்தமிடத் தடை உள்ளது…
இப்படி நிறை சின்னச் சின்ன சுவாரஸ்ய விஷயங்கள் முத்தத்தின் பின்னால் உள்ளது…