கன்னம், நாக்கு, பற்கள், ஈறுகள், சுவை நரம்புகள், தொண்டை இந்தப் பாகங்களில் எதை புற்றுநோய் தாக்கினாலும் அதற்கு வாய் புற்றுநோய் என்று தான் பெயர். வாயில் புற்றுநோய்த் தாக்கத்தின் சிறு அறிகுறி இருந்தாலும் போதும், அது வாயின் இந்த எல்லாப் பகுதிகளையும் மளமளவென்று தாக்கி அழிக்கும் அபாயம் உள்ளது.
வாயில் புற்றுநோய் ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. வாய்ப் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணம் புகையிலை உபயோகிப்பது தான். சிகரெட், பீடி மூலம் புகைப்பதால் மட்டுமல்ல, புகையிலையை நேரடியாக மென்று தின்றாலும் இந்த நோய் தாக்கும்.
குடிப்பழக்கமும் வாய்ப் புற்றுநோய் வர ஒரு முக்கிய காரணம் ஆகும். மது அவருடைய வாயைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வாய்க்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
தினமும் இரு வேளை பற்களை நன்றாக பிரஷ் செய்து, நாக்குகளையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகமாகும். புற்றுநோய்களைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள், தக்காளி, பீன்ஸ், க்ரீன் டீ உள்ளிட்ட பல உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.