இந்திய பன்பாடு,கலாசாரம், தாய்ப்பாசம்னு தொண்டை தண்ணி வறள பேசறோம் -கீ பேட் தேஞ்சு போற அளவுக்கு பக்கம் பக்கமா அடிச்சு கிளிக்கிறோம்.ஆனால் பெத்த அம்மாவை தன்னோட ரெண்டு ஃப்ரென்ட்ஸை கூட்டு சேர்த்துக்கிட்டு கற்பழிச்சு கொன்னிருக்கான் ஒரு மகன். ஆந்திர மானிலம் ,ரங்கா ரெட்டி மாவட்டம், பஷீராபாத் மண்டலம், தாண்டூர் கிட்டே ஒரு வில்லேஜ். பேரு இந்தர்செட். இங்கே லஷ்மம்மா (50) கள்ளு கடை நடத்தி வவுறு வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. இவிகளுக்கு ரெண்டு மவனுங்க. பெரியவன் செத்து போயிட்டான்.அவன் பொஞ்சாதி இவிகளோடவே இருக்கு. சின்னவன் ஸ்ரீனிவாஸ் கவுட்.இவனுக்கும் கண்ணாலமாச்சு. வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருந்தவனுக்கு குடிப்பழக்கம் ஒட்டிக்கிச்சு. மது அடிமையா மாறிட்டான். எப்பப்பாரு குடிக்க காசு கேட்கிறது – இல்லாட்டி கள்ளை ஊத்துங்கறது இதான் ஃபுல் டைம் ஜாப். இவிகளுக்கு 2 ஏக்கர் நிலமும், ஒரு வீடும் இருக்கு. தான் இப்படி சுத்திக்கிட்டிருக்கிறதால அம்மா சொத்தையெல்லாம் அண்ணி பேருக்கு எழுதிருவாளோன்னு சந்தேகம். இது விஷயமா அப்பப்போ வாய் தகராறு அடி தடில்லாம் நடந்துக்கிட்டிருந்திருக்கு. ஒரு கட்டத்துல கவுட் தன் நண்பர்கள் பஸப்பா,ரமேஷுக்கு விஷயத்தை சொல்லி – ஆளுக்கு பத்தாயிரம் தரேன் கிழவியை போட்டு தள்ளிரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கான். கடந்த ஜூலை 4 ஆம் தேதி ராத்திரியும் லஷ்மம்மாவுக்கும் -கவுடுக்கும் சண்டை நடந்திருக்கு. கவுடு வெளிய போயிட்டான்.
அம்மாக்காரி வீட்ல தூங்கிக்கிட்டிருக்கிறச்ச – நள்ளிரவு சமயம் ஓட்டை பிரிச்சு உள்ளாற இறங்கியிருக்கானுவ. டெல் யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் வாட் யுவார்னு சொல்றாய்ங்களே அப்படி கவுடுவோட ஃப்ரெண்ட்ஸும் இவன் கேட்டகிரி தான் போல .ஆல்க்கஹாலிக்ஸ். அம்பது வயசான லஷ்மம்மாவோட வாய்ல துணியை திணிச்சு சத்தம் போடாம செய்துட்டு ஒவ்வொருத்தனா கற்பழிச்சிருக்கானுவ. கடைசியில கவுடு தன் அம்மாவோட கழுத்தை நெறிச்சு கொன்னிருக்கான். அம்மா கழுத்துல காதுல மூக்குல இருந்த ரூ .9 ஆயிரம் மதிப்புள்ள நகைகளையும் – கையில இருந்த ரூ.53 ரூபாயையும் எடுத்துக்கிட்டு தலைமறைவாகியிருக்காய்ங்க. மறு நாள் விடிஞ்சு லஷ்மம்மா வெளிய வராம போகவே அக்கம் பக்கம் உள்ளவுக கதவை தட்டி அலுத்து பக்கத்து தெருவுல உள்ள லஷ்மம்மாவின் தம்பிக்கு தகவல் கொடுத்திருக்காய்ங்க.அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்க விஷயம் மொத்தம் வெளிய வந்திருக்கு. கடந்த சனிக்கிழமை ( நேத்து) மேற்படி 3 பேரையும் பிடிச்சு உள்ளாற போட்டிருக்காய்ங்க. இதான் இந்திய கலாசாரம் போல. இதான் இந்திய பண்பாடு போல. நாம பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கனும்னு எளுதினா மட்டும் நீதி சொல்ல புறப்பட்டுர்ராய்ங்க. மனைவிய பிரிஞ்சு வாழ்ந்த அந்த கவுடுவுக்கும் – அவனோட நண்பர்களுக்கும் செக்ஸ் அவெய்லபிளா இருந்திருந்தா அவிக குடிக்கவே போயிருக்க மாட்டாய்ங்க ( நிப்பிள் காம்ப்ளெக்ஸ்) அம்பது வயசு கிழவியை – கற்பழிச்சும் இருக்கமாட்டாய்ங்க. ஒரு அரசாங்கம் குடும்பங்களை குலைச்சு போடற – குடி மகன்களோட குடலை ஜல்லியாக்கிற மதுவை விற்கும்போது -குடி,சூது,வன்முறை,கிரைம்,கொலை,தற்கொலை எல்லாத்தையும் தவிர்க்கக்கூடிய பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஏன் தயங்குது. ஹிப்பாக்ரசி.. ஜஸ்ட் ஹிப்பாக்ரசி