Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நீண்ட கால பலன்கள்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நீண்ட கால பலன்கள்

35

கர்ப்பபை புற்று நோய் வாய்ப்பு குறைவு.

* 24 சதவீதம் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன.

* இன்சுலின் போட்டுக் கொள்ளும் தாய்மார்களுக்கு இன்சுலின் அளவு குறையும்.

* இடுப்பு, தொடை, வயிறு பகுதிகள் அதிக எடை கூடாது இருக்கும்.

* மூட்டு வலி, எலும்பு தேய்மான பாதிப்புகள் குறையும். பொதுவாக புட்டிப்பாலில் வளரும் குழந்தைகள் அதிக நோய்க்கு ஆளாகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிறந்த குழந்தை பால் குடிக்க நாம் தான் அதற்கான வசதிகளை, வழிகளை கூட்ட வேண்டும்.

சில வாரங்களில் அது கெட்டிக்கார குழந்தையாக தானே குடிக்க கற்றுக் கொள்ளும். ஒவ்வொரு முறை பால் கொடுப்பதும் 20-40 நிமிடங்கள் ஆகலாம். ஒரு மார்பகத்தில் கொடுத்த பிறகு மறுமார்பகத்தில் தரவேண்டும்.

ஒரு பக்கமே எப்போதும் கொடுக்கக் கூடாது. பிறந்த குழந்தை 1 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் பசியினால் அழும். அதாவது 24 மணி நேரத்தில் 8-12 தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருக்கும். பிறந்து 2 வாரம் முதல் 4 வரை இப்படி இருக்கும்.

* ஒரு மார்பகத்தில் 10-20 நிமிடங்கள் வரை குடிக்கும்

* அது குடிக்கும் சத்தம் தாய்க்கு கேட்கும்.

* வாரத்திற்கு அதன் எடை 4-7 அவுன்ஸ் கூடும்.

* குழந்தை ஆரோக்கியமாய் தெரியும். (பின்னர் 5-6 மாதம் வரை குழந்தையின் எடை 100 கிராம்-200 கிராம் வரை ஒவ்வொரு வாரமும் கூடும். பின்னர் ஒவ்வொரு மாதமும் -1கிலோ வரை கூடும். ஒரு வயது வரை இவ்வாறு ஏறத்தாழ இருக்கும்.

உயரத்தில் முதல் ஆறு மாதம் வரை மாதம் ஒரு அங்குலம் கூடும். பின்னர் ஒரு வயது வரை மாதம் 1 அங்குலம் வளரும்.) வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பால் கொடுக்கும் பம்ப்பினை உபயோகப்படுத்தி பாலினை சுத்தமான புட்டியில் வைத்து மென்மையான `ரப்பர் நிப்பின்’ உதவியுடன் பால் கொடுக்கலாம்.

அல்லது மார்பகத்தினை மென்மையான அழுத்தியும் பால் எடுக்கலாம். இதனை சுமார் 4 மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் சுமார் 7 நாட்கள் வரை வைக்கலாம். ஆனால் குளிர்சாதன பெட்டி மின்சார தடையின்றி தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.

`அதிகுளிர்’ பகுதியில் கூட இதனை கூடுதல் காலம் வைக்கலாம். ஆனால் எடுக்கும் பொழுது அறையின் வெப்ப சூழ்நிலைக்கு வந்த பின்னரே பாலை பருகக் கொடுக்க வேண்டும். மென்மையான `ரப்பர் காம்புகள்’ அல்லது ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். உங்கள் மருத்துவரையும் இதில் கலந்தாலோசிக்க வேண்டும்.

சிறு கைக்குழந்தை அதாவது 3 வார குழந்தை அடிக்கடி அழும். சிறிது சிறிதாய் பால் குடிக்கும். பொதுவாய் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் குடிக்கும் என்றும் அநேக குழந்தைகளுக்கு குருவி போன்ற அந்த சிறு வாயால் முதலில் அவ்வளவு நேரம் குடிக்க முடியாது.

எனவே அடிக்கடி சிறிது சிறிதாய் குடிக்கும் இது சில வாரங்களில் நல்ல முன்னேற்றம் பெரும். 6-10 முறை சிறுநீர் செல்லுவதும் பலமுறை கழிவு வெளியேற்றமும் இருக்கும் பொழுது பால் போதுமான அளவு குடிக்கின்றது என்று பொருள் கொள்ளலாம்.