Home பாலியல் கணவன் மற்றும் மனைவி அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்

கணவன் மற்றும் மனைவி அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்

271

பாலியல் தகவல்::அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும் போது கணவன் மற்றும் மனைவிக்கு மனதளவில் நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக திருமணமான ஆணும், பெண்ணும், இரவில் உடலுறவு கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோனோர் அதனையே கடைபிடித்தும் வருகின்றனர். இது தொன்றுதொட்டு வரும் பழக்கமாக கூறப்படுகிறது. சிலர், விருப்பம் இல்லையென்றாலும், அந்த நேரத்தில், அவசர அவசரமாக உடலுறவில் ஈடுபட்டு தூங்கி விடுகின்றனர்.

இதில், சிலர் ஆண்கள் மட்டும் விதிவிலக்காக அதிகாலையில் உறவு கொள்வதையே விரும்புகின்றனர். ஆனால், காலை நேரத்தில் வேகமாக எழுந்துவிட்டு என்ன சமையல் செய்யலாம்? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பனுமே? என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பெண்கள் சிலர், கணவர் முயற்சிக்கும் போது இரவு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தவிர்க்க முயற்சிப்பார்கள்.

இரவு நேரத்தில், உறவு கொள்வதை விட அதிகாலையில், அவர்கள் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் எனப்படும், ரசாயனம் ஒன்று வெளிப்படும். இந்த ரசாயனம் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேலும், மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறதாம்.

அதோடு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுவது தடுக்கப்படுகிறதாம். சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் விரைவில் குணமடைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெண்களது கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடையவும், காலை நேரத்தில் உறவு கொள்வது உதவும் என்று கூறப்பட்டுள்ளது

பகல் முழுவதும் வேலை பார்த்துவரும், ஆண்களும், பெண்களும், இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதற்கு தான் விரும்புவார்கள். அப்படியிருக்கும் ஆண்களும், பெண்களும், அதிகாலையில் உறவு வைத்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படுமாம். அதே நேரத்தில் தங்களது துணையை வற்புறுத்தாமல், இதனை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.