Home ஆண்கள் அதிகாலையில் தினமும் ஆண்குறி விறைப்பு சாதாரண விஷயம் இல்லை

அதிகாலையில் தினமும் ஆண்குறி விறைப்பு சாதாரண விஷயம் இல்லை

959

ஆண்களின் பாலியல்:தினமும் காலை எழும்போது உங்கள் ஆணுறுப்பு விறைத்திருப்பது என்பது சாதாரணமான ஒன்று. சொல்லப்போனால் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே இதனை தினமும் சந்திக்க நேரிடும். திடீரென ஒருநாள் இது நடக்கவில்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவ்வாறு விறைப்பு இன்றி எழுவது ஆண்மைகுறைவின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

காலை நேர விறைப்பு என்பது மிகவும் சாதாரணமானது அதே சமயம் ஆரோக்கியமானது. அனைத்து வயது ஆண்களுக்கும் இது ஏற்படும். ஒருவேளை இது நடக்கவில்லை என்றால் அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் ஏற்படும் மாற்றத்தால்தான். இந்த பதிவில் காளி நேர விறைப்பு ஏற்பட காரணம் என்னவென்றும், அதில் ஏற்படும் குறைபாடுகளை பற்றியும் பார்க்கலாம்.

காலை நேர விறைப்பு நல்லதா?
முன்னரே கூறியது போல காலை நேர விறைப்பு என்பது ஆரோக்கியமான ஒன்று. மேலும் உங்களுடைய வாஸ்குலர் மற்றும் நரம்பு மண்டலம் சீரக இருப்பதற்கான அறிகுறியாகும். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் காலை நேர விறைப்பு இருந்தால்தான் உங்கள் தாம்பத்யத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறலாம்.

காரணங்கள்
காலை நேர விறைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாகும். உங்கள் உடல் தூங்கும்போது பல முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதில் ஆண்களின் பாலியல் திறனுக்கு மிகவும் அவசியமான டெஸ்டோஸ்டிரோன் ஒன்றாகும்.

மன தூண்டல்
காலை நேர விறைப்பு ஏற்பட சில மனரீதியான காரணங்களும் உள்ளது. நீங்கள் தூங்கும்போது குறைந்த அளவு கார்டிசோல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும் ஹார்மோனாகும். தூங்கி எழும்போது கார்டிசோல் அளவு குறைவாகவும், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகவும் இருப்பதால் உங்களுக்கு விறைப்பு ஏற்படுகிறது.

உடல் தூண்டுதல் தூங்கும்போது நீங்கள் எந்த நிலையில் தூங்கிவீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. இந்த சூழ்நிலையில் உங்கள் துணை மீதோ அல்லது வேறு பொருட்களின் மீதோ உங்கள் ஆணுறுப்பு உரசும் போது தானாக அது விறைப்பு தன்மை அடைய தொடங்குகிறது. இந்த மூன்று காரணங்களும் இணைந்துதான் தினமும் காலை உங்கள் ஆணுறுப்பை விறைப்பு அடைய செய்கிறது.

பலன்கள் காலை நேர விறைப்பு என்பது பாலியல் ஆரோக்கியம் மட்டுமின்றி பொதுவான ஆரோக்கியத்திற்கும் நல்ல அறிகுறியாகும். இது உங்களால் விறைப்பு தன்மையை அடைய இயலும் மற்றும் உடல்ரீதியாக உங்களுக்கு ஆண்மைக்குறைவு இல்லை என்பதை உணர்த்துகிறது.

எப்போதெல்லாம் விறைப்பு இருக்காது? சிலசமயம் விறைப்பு இல்லாமல் எழுவது பிரச்சினை இல்லை. தினமும் தூங்கும்போது ஒரு இரவில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து முறை உங்களுக்கு விறைப்பு ஏற்படும். திடீரென தூக்கத்தில் இருந்து எழும்போது விறைப்பு தன்மை இல்லாமல் இருந்தால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்று கவலைப்படாதீர்கள். அதேபோல அடிக்கடி விறைப்பு இல்லாமல் எழுந்தால் ஆண்மைக்குறைவு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

விறைப்பு ஏற்படாமல் இருக்க காரணங்கள் விறைப்பு பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் குறைவான உற்பத்திதான். அதுமட்டுமின்றி மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளான அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு போன்றவற்றால் கூட காலை நேர விறைப்பு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படலாம். சிலசமயம் அதிக மனஅழுத்தம், பயம் போன்ற உளவியல் காரணங்களும் காலை நேர விறைப்பை தடுக்கும்.

மற்ற காரணங்கள் மற்றொரு முக்கிய காரணம் ஆண்களின் வயது. வயதை பொறுத்து விறைப்பின் அளவு மாறுபடும். குறிப்பாக 60 முதல் 70 வயது உள்ள ஆண்களுக்கு விறைப்பு மிக குறைவகவவே இருக்கும். ஆண்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் கூட விறைப்பு தன்மையை பாதிக்கும். தொடர்ந்து வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது இந்த பிரச்சினை ஏற்படும்

என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து காலை நேர விறைப்பு இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். இந்த பிரச்சினை ஆண்மைகுறைவால் ஏற்படுகிறதா அல்லது உளவியல் காரணங்கள் ஏற்படுகிறதா என்பது கண்டறிய வேண்டும். இந்த பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் சத்தான உணவு மற்றும் மருந்துகள் மூலமே குணப்படுத்திவிடலாம்.