Home ஆரோக்கியம் தினமும் காலை உணவை தவிர்ப்பவர்கள் இத படித்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

தினமும் காலை உணவை தவிர்ப்பவர்கள் இத படித்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

36

காலை உணவு மிக முக்கியமானது. இது நமது முழு நாளிற்குரிய சக்தியை தூண்டுவதுடன், உடலில் கலோரிகளை குறைக்க உதவுகிறது.

நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து, டீ , காபியை எடுத்து கொள்கின்றனர். காலை எழும்பும் போது உடலில் குளுக்கோஸின் அளவு குறைவாகவே இருக்கும்.

இதனை சமநிலைப் படுத்த காலை உணவு அவசியமானது.

காலை உணவை சரியாக எடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நீரிழிவு, கொழுப்பு, உடல் எடை அதிகரித்தல், இருதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

காலை உணவை தவிர்ப்பதனால் உடலில் பல கோளாறுகள் ஏற்படும். அத்துடன் முழு நாளும் அதிகமாக சாப்பிடுவதற்கு தூண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு நாளை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவும். இதோ உங்களுக்கான ஆரோக்கியமான காலை உணவு வகை..

சீயா விதைகள்

சீயா விதைகளில் ஒமேகா 3, 6 கொழுப்பமிலங்கள் உள்ளன. அத்துடன் இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் தன்மையும், வீக்கத்திற்கு எதிராக செயற்படும் திறனும் இதயத் தொகுதியை ஆரோக்கியாமாக வைத்திருக்க உதவுகின்றது.

ஒரு அவுன்ஸ் சீயா விதையில் 18% கல்சியம், 27% பொஸ்பரஸ், 30% மங்கனீஸ் மற்றும் பொட்டாசியம், செம்புகள் கானப்படுகின்றன. இதனால் வாதம், நீரிழிவு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைத் தடுகின்றது.

ஓட்ஸ் உணவு

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுகன், கரையும் நார்ப் பொருட்கள் உடலின் கொழுப்பை இலகுவாக குறைத்து விடுகின்றன. அத்துடன்தொடர்ச்சியாக எடுத்து வருவதால் இதயத் தொகுதியின் ஆரோக்கியத்தைப் பேண முடிகிறது.

ஒட்ஸில் மங்கனீஸ், பொஸ்பரஸ், சிங், மக்னீசியம், இரும்பு, செலினீயம், தலமின் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளன. சமைத்த ஓட்ஸில் 6g புரோட்டின், 4g நார்ப் பொருட்கள், 150 கலோரிகள் கானப்படுகின்றன.

தேவயான பொருட்கள்

• ஓட்ஸ் – 1 கப்

• நீர் – 2 கப்

• தேன் – 2 தேக்கரண்டி

• இலவங்கப்பட்டை – 1 தேக்கரண்டி

• உப்பு – சிறிதளவு

• சீயா விதைகள் – 4 தேக்கரண்டி

செய்முறை

நீரை பானைக்குள் ஊற்றி இலவங்கப்பட்டை, ஓட்ஸ்ஸை அத்துடன் சேர்த்து 5 நிமிடங்கள் வரை இதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

பின்பு பானையை மூடி வைத்து சிறிது நேரத்தின் பின்னர் தேன், உப்பு, சீயா விதைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த சுவையான உணவை காலையில் எடுத்து வந்தால் குளுக்கோஸ், கொழுப்பின் அளவு குறைவதுடன் வயிற்றுப் பகுதி கொழுப்பு கரைகின்றது.