உடல் கட்டுபாடு:பலர் அதிகாலையிலேயே தங்கள் பாதணிகளை அணிந்து கொண்டு நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுவிடுகின்றனர்.
எனினும் நமது உடலியலுக்கமைய நாம் உடற்பயிற்சி செய்வதற்கான சரியான நேரம் என்ன என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி நமக்கு சிறப்பான உணர்வை கொடுக்கும் – ஆனால் காலையில் தசைகள் இறுக்கமாக இருக்கும். இதன் போது உடற்பயிற்சியில் ஈடுப்படலாம். தாமதமாக உடற்பயிற்சியில் ஈடுப்பட்டால் அது உறக்கத்தை பாதிக்கும். அத்துடன் அது எதிர்மறையான உணர்வை ஏற்படுத்தும்.
காலை நேர பயன்கள்
காலையில் வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவது சில நேரங்களில் எளிதானது.
மதியம் மற்றும் மாலை உடற்பயிற்சிகளில் ஈடுப்படும் போது அது பிற பொறுப்புகள் காரணமாக தடைப்படும்.
முழுநாளும் வேலை செய்பவர்களின் மனஉறுதியில் பாதிப்பு ஏற்படுவதாக எண்ணுகின்றனர்.
ஜிம் சென்றால் அதனை சமாளிக்க முடியும் என்பது ஜிம் செல்பவர்களின் நோக்கமாகும்.
காலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை போக்கும் ஒரு முக்கிய விடயமாக உள்ளது.
உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இதனால் மாலை நேரங்களில் செய்யும் உடற்பயிற்சி ( இரவு 8 மணிக்கு பின்னர்) தூக்கத்தை கெடுக்கும்.
காலை 7 மணியளவில் செய்யும் உடற்பயிற்சி தூக்கத்தை மேலும் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகின்றது.
மதிய நேர பயன்கள்
காலை நேரத்தில் ஏற்படும் வியர்வைகள் நல்ல பலனை கொடுக்கும் என பலர் நினைக்கின்றனர்.
மாலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி வியர்வையை வெளியேற்றாது.
நாம் ஜிம்மிற்கு செல்லும் வழமையான நேரத்தை உடம்பு ஏற்று கொள்ளும் என ஆய்விகள் கூறுகின்றது.
மாலை 4 மணிக்கு ஜிம்மிற்கு தினமும் சென்றால், நாம் அந்த நேரத்திற்கு உடனடியாக பழகிவிடுவோம்.
ஏனைய நேரங்களில் செல்வதனை விடவும் அதே 4 மணிக்கு சென்றால் நல்ல முறையில் உடற்பயிற்சி செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட உடற் பயிற்சி நேரம், சிறந்த பலனை கொடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய சிறந்த செயல்திறன், அதிக ஆக்ஸிஜன் நுகர்வு மற்றும் குறைவான சோர்வு உணர்திறன் ஆகியவற்றை குறிப்பிட்ட உடற் பயிற்சி நேரம் கடைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படுகின்ற பலனாகும்.
எனினும் பல விதமான நேரங்களை தெரிவு செய்து உடற்பயிற்சி செய்வது சிக்கிலான விடயமாக மாற்றமடையும் என குறிப்பிடப்படுகின்றது.
உடற்பயிற்சியின் தரத்தை தீர்மானிப்பதில் உடலின் மைய வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும்.
ஒரு குளிரான உடல் தசைகளை கடினமாக்கும், திறனற்றவையாக்கும், மற்றும் சுளுக்குக்குகளில் எளிதில் பாதிப்படைய செய்யும்.
எனினும் அதிக உடல் வெப்பம் தசைகள் மிகவும் நெகிழ்வானவையாக மாற்றி சிறந்த பலனை கொடுக்கும்.
உடல் வெப்பநிலை பொதுவாக நாள் முழுவதும் அதிகரிக்கிறது, எனவே உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது தசை வலிமை பெறுகின்றது.
உடற்பயிற்சியின் முக்கிய பகுதி
உடற்பயிற்சி எப்போது செய்வதென்பதனை விட நேர தீர்மானம் முக்கியமானதாகும்.
காலையில் உடற்பயிற்சி செய்வது சிறப்பானதாகும்.
தூக்கத்திலிருந்து குளிர்ச்சியாகவும் இறுக்கமாகவும் இருக்கும்.
தசைகள் சூடாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதில் தவறில்லை.
எனினும் ஒரே நேரத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.
உடற்பயிற்சி செய்வதற்கு நண்பர் ஒருவரை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
ஜிம் பை ஒன்றை எப்போதும், காரில் வைத்து கொள்ளுங்கள்.