உறவு நன்மைகள்:அதிகாலையில் ஆண்-பெண் இருவரும் நெருக்கமான உடலுறவு மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகாலை உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகி இதயத்துக்கு வலு சேர்க்கிறது. உடலுறவின் போது தம்பதிகளின் உடலில் இருந்து வெளியேறும் ஆக்ஸிடாக்ஸின் எனும் ஹார்மோன், இருவருக்குமிடையேயான காதலை அதிகரிப்பதுடன், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.
ஆக்ஸிடாக்ஸின் ஹார்மோன் வெளியாவதனால் கீழ்முதுகில் ஏற்படும் வலி குணமடைகிறது. பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்துக்கு முன் அதிகாலையில் உடலுறவுக் கொண்டால், வயிற்றுப் பிடிப்பு தசைகள் குறைந்து மாதவிடாய் வலி ஏற்படாமல் இருக்கும்.
அதேபோல், ஆண்கள் அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது, விந்தணுக்கள் சீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
அதிகாலை உடலுறவு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது. இதனால் ஆண்-பெண் இருவரின் முகமும் பொலிவுடன் பிரகாசிப்பதோடு முதுமை தோற்றம் வராமல் தடுக்கிறது. தினமும் அதிகாலையில் 30 நிமிடம் உடலுறவு மேற்கொள்வது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும். ஆகையால் உடல் ஃபிட்டாக இருக்கும்.
உடலுறவின் போது ஆண் மற்றும் பெண் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கப்படும் எண்டோர்ஃபின் ஹார்மோன் வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதேபோல், உடலுறவின் போது உற்பத்தியாகும் டோஃபமைன் ஹார்மோன் ஆண்-பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தாம்பத்திய வாழ்க்கை சிறக்கவும், மன அமைதி நீங்கி உடலுறவின் இன்பம் காண அதிகாலையே சிறந்த நேரம் என ஆராய்ச்சிக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.