Home ஆண்கள் விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

97

low-sex-drive1சொட்டு இரத்தம் = 1 சொட்டு விந்து சரியா?
தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா?
இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை!
male 198இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில் ஊறுவதுபோல் விந்துப் பையில் விந்து சுரக்கும். எனவே, 60 சொட்டு இரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது தப்பு.
விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பு ஏற்படும், உறுப்பு சிறுத்து, துவண்டு விடும். உடலுறவு கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் அச்சுறுத்தி இலட்சக்கணக்கான இளைஞர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக, மன உளச்சல் உடையவர்களாக, அச்சம் உடையவர்களாக ஆக்கி வைத்துள்ளனர்.
இளைஞர்களே இது உண்மையல்ல.
சுய இன்பத்தில் ஈடுபட்டு, கையால் விந்தை வெளியேற்றுவது இளைஞர்களின் இயல்பு. இது நல்லது. தப்பான செயலில் ஈடுபடாமல் காக்கிறது. இதில் கேடு ஏதும் இல்லை.
இதனால் ஆண்மை இழப்பு ஏற்படாது. உறுப்பு சிறுத்துப் போகாது; துவண்டு போகாது. அப்படி நினைத்து தன்னம்பிக்கை இழப்பதால்தான் இப்பாதிப்புகள் வருவதுபோல் தோன்றும். ஆனால், இது பொய். நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று தன்னம்பிக்கையோடு இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஈடுபட்டால் இதனால் எப்பாதிப்பு இல்லை என்பதை அறியலாம்.
திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு நான்கைந்து முறைகூட உடலுறவு கொள்வர். இதனால் ஆண்மையோ, உடல் நலமோ பாதிக்கப்படுவதில்லை.
ஆண்கள் 13 முதல் 14 வயதில் பருவம் அடைவர். அப்போது தனிமையில் கையால் விந்து வெளியேற்றி சுயஇன்பம் அடைவர். இவ்வாறு வெளியேற்றவில்லை யெனில் இரவில் கனவில் தானே வெளியேறும்.
எந்தவொன்றும் அளவு மீறக்கூடாது என்பது இதற்கும் பொருந்தும். 14 வயதில் தினம் வெளியேற்றுவர். பின் வாரம் மூன்று நான்கு நாள்கள். அதன் பின் வாரம் ஒருமுறை என்று குறையும். இதனால் ஆண்மை இழப்போ. உறுப்பு தளர்வோ வரவே வராது.
அப்படி வரும் என்ற தப்பான எண்ணத்தால்தான் உறுப்பு தளர்வு ஏற்படுகிறது. இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாலே உறுப்பு எழுச்சி நல்ல முறையில் இருக்கும்.
பொதுவாக ஆண்கள் 14 வயது முதல் 18 வயதுவரை தினம் விந்தை வெளியேற்றுவதை அல்லது ஒரு நாளைக்கு சிலமுறை வெளியேற்றுவதை தவிர்த்து, எப்போது உணர்வு கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் செல்கிறதோ அப்போது தன்மையில் வெளியேற்றுவது சிறந்தது.
தினம் செய்வதால் உடலின் பொலிவு, செழுமை குறையும். மற்றபடி ஆண்மை குறையாது.
வாரம் ஒருமுறை இருமுறை சுயஇன்பத்தால் ஈடுபடுவது உடல் நலத்திற்கு நல்லது.
25 வயது முதல் 35 வயது வரை ஒருநாள் விட்டு ஒருநாள்; 35 வயது முதல் 45 வயது வரை வாரம் ஒருமுறை; 45 வயது முதல் 55 வயது வரை மாதம் இருமுறை.
55 வயது முதல் 70 வயது வரை மாதம் ஒரு முறை உடலுறவு கொள்வது அல்லது சுயஇன்பம் செய்வது நலம் தரும். கோடைக்காலத்தில் அதிகம் விந்து வெளியேற்றப்படாமல் இருப்பது நல்லது.
இவற்றைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் அளவு மிஞ்சாது அளவோடு இன்பம் அடைந்து மகிழ்வோடு வாழ வேண்டும். மாறாக, இதைத் தவறாக எண்ணி அஞ்சி, தன்னம்பிக்கை இழந்து தளர்ந்து போகக் கூடாது