பாலியல் தகவல்:மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும்.
சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும்.
தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது.
செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும்.
மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய பிரச்சனையாக்கி சண்டை போடுவார்கள்.
மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது?
செக்ஸ் உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம்.
செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க பல விசயங்கள் உள்ளன.
உங்களின் மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.
சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால் இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் அதிகரிக்கும்.
அதனால் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும்.
செக்ஸ் விசயத்தில் விடப்படும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போலத்தான் செக்ஸ் உறவும்.
அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, மனமும் சார்ந்தது.