Home பெண்கள் அழகு குறிப்பு மூக்கில் இருக்கும் முடிகளைப் பராமரிப்பதற்கான குறிப்புகள்

மூக்கில் இருக்கும் முடிகளைப் பராமரிப்பதற்கான குறிப்புகள்

29

மூக்கில் இருக்கும் முடியின் அவசியமும் அவற்றை அகற்ற வேண்டிய அவசியமும்

சுவாசப் பாதையின், முதல் உறுப்பு மூக்கு. தூசி மற்றும் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சுவாசப்பாதைக்குள் நுழையாதவண்ணம் தடுப்பதில் மூக்கில் இருக்கும் முடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மூக்கில் இருக்கும் முடியை நாம் அகற்ற நினைப்பது பெரும்பாலும் அழகுக்காகவே. அதாவது சிலசமயம் முடி வெளியே அதிகம் நீண்டு தொங்கிக்கொண்டு இருக்கும். இது போன்ற சமயங்களில் அவற்றை அகற்றுவதுதான் தீர்வாக இருக்கும்.

மூக்கு முடிகளை வெட்டுதல்

மழுங்கலான, மென்மையான முனை கொண்ட சிறிய கத்தரிக்கோலால் மூக்கில் இருக்கும் முடிகளை வெட்டுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். முடிவெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தரியை மூக்கில் இருக்கும் முடியை வெட்டப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏதேனும் சிறு தவறு நடந்தாலும் மூக்கில் இருக்கும் தோலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வரலாம், வடு ஏற்படலாம்.

மூக்கில் கத்தரியைப் பயன்படுத்தும்போது மிகக் கவனமாக இருக்கவும், மெதுவாகப் பயன்படுத்தவும். மழுங்கலான முனை கொண்ட கத்தரியாக இருந்தாலும், வேகமாகப் பயன்படுத்தினால் நாசித்துவாரத்தில் காயம் ஏற்படக்கூடும்.
உருப்பெருக்கிக் காட்டும் கண்ணாடி இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள். இதுபோன்ற சில கண்ணாடிகள் 3-5 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் திறனுடையவை, ஆகவே நாசித்துவாரத்தை நீங்கள் தெளிவாகக் காண முடியும்.
உங்கள் மூக்கின் நுனியை மேல்நோக்கி தள்ளிக்கொள்ளவும் அல்லது புன்னகைக்கவும், இப்படிச் செய்வதால் நாசித்துவாரத்தை இன்னும் தெளிவாகப் பார்க்கலாம், மறைந்திருக்கும் முடிகளையும் பார்க்கலாம்.
வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நீண்ட முடிகளை முதலில் வெட்டவும். இவைதான் அழகைக் கெடுப்பவை, பெரும்பாலும் அசௌகரியத்தை ஏற்படுத்துபவை.
வெளியே நீண்டுகொண்டு இல்லாத அளவுக்கு முடிகளை வெட்டினால் போதும். மிக ஆழமாக கத்தரியைக் கொண்டு சென்று முடிகளை வெட்ட முயற்சி செய்ய வேண்டாம்.
அவ்வப்போது கத்தரிக்கோலை சோதனை செய்து பார்க்கவும், அடிக்கடிப் பயன்படுத்துவதால் அவை கூர் மங்கிப் போகலாம். தேய்ந்துபோன பழைய கத்தரியைக் கொண்டு முடிகளை வெட்ட முயற்சிசெய்யும்போது அவை முடியை வெட்டுவதற்குப் பதிலாக முடியை இழுக்கும், இதனால் வலி ஏற்படலாம்.
மூக்கு முடிகளை ஷேவிங் செய்தல்

மூக்குக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய பாகங்களைக் கொண்ட ட்ரிம்மர்களும் எலக்ட்ரிக் ரேசர்களும் கூடக் கிடைக்கின்றன. இவற்றில் சிறிய கத்தரியும், பாதுகாப்புக்கான பாகங்களும் பொருத்தப்பட்டிருக்கும். உங்களுக்கு மூக்கில் முடி மீண்டும் மீண்டும் வேகமாக வளர்ந்தால், முடி தடிமனாக இருந்தால் இந்த ட்ரிம்மர்கள் உங்களுக்குப் பயன்படும்.

ட்ரிம்மர்களைப் பயன்படுத்தும்போது, மூக்கில் மிக ஆழமாக அவற்றை உள்ளே விட வேண்டாம், எந்த அளவுக்கு ஆழமாக உள்ளே விடலாம் என்பதை சரியாக முடிவு செய்து பத்திரமாகப் பயன்படுத்தவும். வழக்கமான ஷேவிங் ரேசர்களை மூக்கு முடியை ஷேவிங் செய்ய ஒருபோதும் உள்ளே விட வேண்டாம், அவை மூக்கில் உள்ள மென்மையான தோலையும் சவ்வையும் சேதப்படுத்தி காயம் ஏற்படுத்திவிடக்கூடும்.

லேசர் முறையில் முடி அகற்றுதல்

உங்கள் மூக்கில் முடி வேகமாக வளர்ந்தால், உங்கள் முடி மிகவும் தடிமனாக இருந்தால், தொழில்முறை நிபுணரைக் கொண்டு லேசர் முறை அல்லது எலக்ட்ரோலிசிஸ் முறையில் முடி அகற்றிக் கொள்ளலாம். இது நல்ல பலனளிக்கும் முறையாகும், ஆனால் அதிக செலவாகும்.

எச்சரிக்கை

மூக்கிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால், அது மைய நரம்பு மண்டலத்திற்கும் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இவை இரண்டுக்கும் பொதுவாகவே இரத்த ஓட்டம் பாயும். ஆகவே, இந்தப் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.