பொது மருத்துவம்:பெரும்பாண்மை இளைஞர்கள் அவதிப்பட்டு வரும் ஆண்மை குறைவிற்கு காரணம் மன அழுத்தம் தான் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது!
இங்கிலாந்து நாட்டு பிரபல பல்கலை., நடத்திய ஆய்வில் ஆண்மை குறைவு ஏற்பட 45% மன அழுத்தம் தான் காரணமாக அமைகின்றது என தெரிவிக்கின்றது.
அதேப்போல் பிரபல ஆங்கில வானொலி நடத்திய நிகழ் அலை ஆய்வு ஒன்றில், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் தாம்பத்திய பிரச்சணைகளுக்கு காரணமாக உடல்நல குறைவு என கூறப்படுவது இரண்டாம் பட்சம் எனவும், மன அழுத்தம் தான் முதலிடம் வகிக்கின்றது எனவும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின் படி இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட காரணமாக… 32% தனிநபர் விருப்பத்தில் ஏற்படும் ஏமாற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மல-நல அழுத்தம் 26% எனவும், வேலைபளு 20% எனவும், குழந்தை பராமறிப்பு போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் 18% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி ஆபாச படங்களுக்கு அடிமையானவர்களுக்கு 12% ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து சமூக ஊடங்களில் மூழ்கியிருப்பவர்கள் 10% ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் குறிப்பிடும் வகையில்., மாதிரிக்காக எடுத்தக்கொண்டவர்களில் 50% ஆண்கள் தாம்பத்திய பிரச்சணைகளை கொண்டும், அதை பொருட்படுத்தாமல் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இல்லற மகிழ்ச்சி என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல, மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என தெரிகிறது.