Home பெண்கள் தாய்மை நலம் பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு

பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு

29

211e5dbb-dbd6-4176-b87a-888db0dbe802_S_secvpf* பால் சுரப்பி அடைபடும் பொழுது வலியும், கிருமி தாக்குதலும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க சரியான ப்ரா, முதுகின் மீது படுத்து தூங்குதல், அதிக நேரம் பால் கொடுக்காது இருப்பதை தவிர்த்தல் போன்றவை அவசியமாவை.

* குழந்தை அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் அக்குழந்தையினை பசி அறிய முடியாமல் செய்யும். எனவே முடிந்தவரை வாயில் ரப்பர் வைப்பதினை தவிருங்கள்.

* சில நேரங்களில் குழந்தை அடிக்கடி பால் குடிக்கும். இது வளர்ச்சியின் போக்கு. சில நாட்களில் இது சரியாகி விடும்.

* ஒரு வேளை குழந்தைக்கு பிறந்த பொழுதில் `மஞ்சள் காமாலை’ இருக்குமாயின் அது பால் குடிப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆனால் இது அநேகமாய் தானே சரியாகும். இதற்கு தற்போது நல்ல மருத்துவ சிகிச்சையும் உண்டு.

* மார்பக நோய்கள் இருப்பின் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனை அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அதற்கேற்றார் போல் உங்களது `ப்ரா’ மாற வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே ப்ரத்யேக உள்ளாடை உள்ளது. மார்பகத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க வசதியாக திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.

இதில் சரியான அளவு என்பது மார்பக அடியில் வரும் பட்டை மார்பகத்தை அழுத்தாது இருக்க வேண்டும். அதே போன்று மார்பகத்தை அழுத்தாத, அதே நேரம் மிகவும் லூஸாக இல்லாத அளவினை தேர்வு செய்ய வேண்டும். அதிக அழுத்தமானது பால் சுரப்பில் குறைவு ஏற்படச் செய்யும். மார்பக வலி ஏற்படும். லூஸாக இருப்பது மார்பகத்தை தொய்வுறச் செய்யும்.

இதனாலும் வலி ஏற்படும். கர்ப்பகாலத்தில் மார்பக விரிவிற்கேற்றார் போல் `ப்ரா’ வாங்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மார்பகம் நாம் சற்று அச்சம் கொள்ளும் அளவு பெரிதாகும். இது இயற்கையானதே. இது தானே சரியாகக் கூடியது. எனவே குழந்தை பிறந்த பிறகு மார்பக அளவினைப் பொறுத்து `தாய்ப்பால் ப்ரா’ வாங்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சோர்வின் காரணமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பார்கள். இது தவறு. 20 நிமிட நடை பயிற்சியாவது முதலில் இருக்க வேண்டும். ஆனால் உடற்பயிற்சி செய்த பிறகு நன்கு குளியுங்கள். எப்பொழுதுமே மார்பகத்தின் மீது மிதமான சூட்டில் சுடுநீர் `ஷவர்’ 5 நிமிடம் இருந்தால் நல்லது.

இது நல்ல இரத்த ஓட்டத்தினையும், தாய்ப்பால் அடைபடாமல் வருவதற்கும், மார்பக வலி ஏற்படாமல் இருப்பதற்கும் உதவும். வாசனை சோப்புகள், நெடியான சீக்காய், சென்ட் போன்றவை கண்டிப்பாய் உபயோகிக்கக் கூடாது. வேர்வை துர்நாற்றம், வாசனை நெடி போன்றவை குழந்தையை பால் குடிக்க விடாது தடுக்கும்.