Home ஆண்கள் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையில் மூன்று வகைகள் இருக்கின்றன

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையில் மூன்று வகைகள் இருக்கின்றன

74

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையில் மூன்று வகைகள் இருக்கின்றன. முதலாவது நேரடி தொடர்பில் ஏற்படுவது. இரண்டாவது ஒளி மற்றும் ஒலி மூலமாக ஏற்படுவது, மூன்றாவது சிலருக்கு இரவு நேரங்களில் பொதுவாக ஏற்படுவது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகை ஆண்கள் தாங்களாக ஏற்படுத்திக்கொள்வது. இது உகந்ததல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு. விறைப்புத்தன்மை குறைகிறது. அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண் ஹார்மோன் அளவு குறைந்த அளவில் தான் சுரக்கிறது. இதனால், அவர்களுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது.

சில ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போது சிறிது வளைந்து காணப்படும். இதற்காக கவலைக்கொள்ள தேவையில்லை. இது இயற்கையான ஒன்றுதான். ஆனால், ஆண்குறி மிக வளைந்து காண்பது போல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், அது, பெரோனி (Peyronie) நோயாக இருக்க வாய்ப்புள்ளது.

நல்ல உறக்கம் கொள்பவர்களுக்கு, விறைப்புத்தன்மை அதிகரிக்கும். உடலில் சோர்வு இருக்கும் பட்சத்தில் விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பிருகிறது. நீங்கள் நன்கு தூங்கி எழும் போது, உங்கள் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால், நல்ல தூக்கம் கொள்பவர்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கிறது.

ஆண்களுக்கு விறைப்புத்தன்மைக்கு மதுவும், புகையும் எதிரிகள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகப்படியாக மது அருந்துவோர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.