தம்பதிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்து, மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வதால் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதே.
எனினும் இதை மீறி உறவு வைத்துக் கொள்வதால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பான ஆய்வில், மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்றும், பல நன்மைகள் கிடைப்பதாகவும் பெண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தம்பதிகள் ஆரோக்கியமான உடல் அமைப்புடன் மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபட்டால், எந்தவொரு ஆபத்துகளும் ஏற்படுவதில்லை.
இருவரும் உறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்து, உறவை மேற்கொண்டால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மன அமைதி கிடைத்து ரிலாக்ஸாக இருக்க முடியும்.
பொதுவாக உடலுறவின் போது இருவருக்கும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவை குறையும்.
உறவில் உச்சகட்ட இன்பத்தின் போது பெண்களின் மூளையில் இருந்து ஒருவித கெமிக்கல்கள் வெளியேற்றப்படும், இவைகள் வலி நிவாரணி போன்று செயல்பட்டு, தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கின்றது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் பாலுணர்ச்சி அதிகம் செயல்படுகிறது.