Home ஆண்கள் ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கு இதை மட்டும் செய்தால் போதும்

ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கு இதை மட்டும் செய்தால் போதும்

216

ஆண்மை இழப்பு:இன்றைய காலத்தில் ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான்.

மிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தற்போது காணலாம்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை என்ன தெரியுமா? அது தான் கொய்யா இலை. இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும் உயர்ந்து இருப்பதை காணலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இந்த இலைகள் இது தவிர பற்பல நன்மைகளை மனித உடலுக்கு அளிக்கின்றன.

கொய்யா இலைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இந்த இலைகளை தேயிலைத்தூள் போன்று தயார் செய்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, சரியான எடையில் நல்ல கொழுப்பை மட்டும் உடலில் தங்க வைத்து, உடலினை சீராக இயங்க வைக்க உதவும்.

கொய்யா இலைகளை சாறு போன்று தயாரித்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊற வைத்து அலசி வந்தால், பேன் தொல்லையை முற்றிலுமாக போக்க உதவும். கொய்யா இலைகளை பொடி செய்து, உணவிலோ அல்லது தேநீர் போன்றோ தயாரித்து உட்கொண்டால், அது செரிமான பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, வயிறை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

அடுத்ததாக, கொய்யா இலையை கொண்டு தேநீர் தயாரிப்பது எப்படி என்று படித்தறிவோம் வாருங்கள்!

கொய்யா இலை தேநீர்
தேவையான பொருட்கள்: கொய்யா இலையை தயாரிக்க சுத்தமான கொய்யா இலைகள் 5, சுத்தமான தேனினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; மேலும் 2 ஏலக்காய்களை பொடி செய்தோ அல்லது தட்டிப்போட்டோ உபயோகித்துக் கொள்ளலாம்.

செய்முறை: எடுத்து வைத்த சுத்தமான கொய்யா இலைகளை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடி செய்தோ நீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்; பின் அந்த நீரினை நன்றாக வடிகட்டி,அதில் தேனை தேவையான அளவு சேர்த்து குடிக்கலாம்; கொய்யா இலையின் வாசம் குறைய ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை தட்டி டீயில் சேர்த்து பருகலாம்.

கொய்யா இலைகளினால் செய்த தேநீரை தொடர்ந்து பருகி வருவது, புற்றுநோய், பாக்டீரியா தொந்தரவுகள், எரிச்சல், அரிப்பு போன்றவற்றை உடலில் ஏற்படாமல் தடுக்க உதவும்; மேலும் வயிற்றுப்போக்கு, டையேரியா, காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை ஏற்படாமல் அல்லது இது போன்ற நோய்களை குணப்படுத்த உதவும்.