தாய் நலம்:ஆண் பெண் என்று இருபாலாரையும் எடுத்துக் கொண்டால். அவர்களின் உடல் நிலையில் பல மாறுதல்கள் இருந்தாலும். பெண்களை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட பின்னரே அவர்கள் கர்பம் தரிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும் 21 வயது மிகவும் சரியான வயது என்கிறார்கள் சில மருத்துவர்கள். ஆனால் ஆண்களை பொறுதவரை 13 வயதில் இருந்தே அவர்கள் ஒரு பெண்ணை கர்பமாக்க தகுதி அடைந்து விடுகிறார்கள். பின்னர் நாளாக நாளாக அவர்களின் அந்த தன்மையும் வீரியமும் படிப்படியே குறைந்து செல்கிறது.
எனவே ஒரு பெண் கர்பமாவது தொடர்பாக ஒரு வயது எல்லை காணப்பட்டாலும். ஆண்கள் ஒரு பெண்ணை கர்பமாக்க சிறுவயதாக இருந்தால் போதும் என்ற நிலை காணப்படுகிறது. இது இயற்கையின் படைப்பாகவே கருத்தப்படுகிறது. உலகில் மனித குலம் அழிந்து போகாமல் இருக்க இதுபோன்ற சில மகத்துவங்களை இயற்கை நமது உடலுக்கு தந்துள்ளது.
எனவே பெண்கள் தமது கர்ப வயதைப் பற்றி கவலை கொள்வதை விடுத்து. நல்ல ஆரோக்கியமான ஆண் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுப்பது நல்லது. மித மிஞ்சிய உடல் எடை அல்லது பருமன் கொன்ட ஆண்களும், பெண்களும் பிள்ளைப் பேறை இழாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. எனவே உடல் எடை மற்றும் பருமன், மிக மிக முக்கியமான காரணியாக உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.