Home பெண்கள் அழகு குறிப்பு மார்பு முடியை ஷேவ் செய்யலாமா? எங்கு செய்யலாம்?… எங்கு செய்யக்கூடாது?

மார்பு முடியை ஷேவ் செய்யலாமா? எங்கு செய்யலாம்?… எங்கு செய்யக்கூடாது?

266

ஆண் அழகு குறிப்பு:உடலில் சில பகுதிகளில் முடிகள் இருக்கும். இதனைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. குறிப்பாக ஆண்கள் தங்கள் உடலின் முடி வளர்ச்சியைப் பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை.

மாறாக, பெண்கள் தங்கள் உடலின் முடிகளை அகற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களில் தங்கள் உடலில் உள்ள முடிகள் குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.

அக்குள் முடி அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்றுக் கொள்ளும் விஷயம், அக்குள் முடியை அகற்றுவது. சுகாதார காரணங்களுக்காக, இந்த செயல் அவசியமாகிறது. தினமும் இந்த முடிகளை ட்ரிம் செய்யலாம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை முற்றிலுமாக ஷேவ் செய்யலாம். அக்குள் முடியை அகற்றாமல் விடுவதால் உங்கள் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசலாம். இந்த துர்நாற்றம் அனைவரையும் உங்கள் அருகில் சேர்க்க விடாது. அப்படி அக்குள் முடியை அகற்றாதபோது டியோடரண்ட் அல்லது துர்நாற்றம் வெளியில் தெரியாத சட்டையை அணிவது அணிவது அவசியமாகிறது.

முதுகு மற்றும் தோள்பட்டை முடி இது பெண்களை அதிகம் முகம் சுளிக்க வைக்கும். கீழ் முதுகு, மேல் முதுகு அல்லது தோள்பட்டையில் இருக்கும் முடிகள் ஆதி கால மனிதனை ஞாபகப்படுத்தும். இதனை கண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்த ட்ரென்ட் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது. அதனால் முக்கியமான விழா அல்லது விசேஷ நாட்களில் மட்டுமாவது இந்த முடிகளை அகற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கைக்கு எட்டாத கீழ் முதுகு மற்றும் மேல் முதுகு பகுதியில் உள்ள முடிகளை எப்படி அகற்றுவது என்று குழப்பமாக உள்ளதா? அதற்கேற்ற வகையில் கைப்பிடி கொண்ட க்ரூமர்களை வாங்கி பயன்படுத்தவும். வாக்சிங் செய்வதில் உடன்பாடு உள்ளவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதனை செய்தால் போதுமானது. வாக்சிங் முறையால் அதிக பாதிப்பு எதுவும் உண்டாவதில்லை. மேலும் தொடர்ந்து வாக்சிங் செய்து வருவதால் முடி வளர்ச்சியும் குறையலாம். சில காலங்களுக்கு பிறகு முடி வளர்ச்சி முற்றிலும் தடுக்கப்படலாம். இதனால் ஷேவ் செய்யும் வேலையும் இல்லாமல் போகலாம்.

பிறப்புறுப்பு முடி இந்த பகுதியில் நீளமான முடி வளர்ச்சி இருப்பது உங்கள் துணைக்கு பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்கு இதே உணர்வு இருக்கலாம் அல்லவா? அதிகமாக புல் வளர்ந்த மைதானத்தில் கால்பந்து விளையாட எந்த ஒரு வீரரும் விரும்புவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இந்த பகுதியில் ஷேவ் அல்லது ட்ரிம் செய்வது சற்று கடினமாக இருக்கலாம். சிலருக்கு இந்த இடத்தில் சில கட்டிகள் தோன்றலாம். அதனால் உங்களுக்கு தெரிந்த வகையில் இந்த இடத்தை பராமரித்துக் கொள்ளுங்கள். குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை, பராமரிப்பதால் நன்மை கிடைக்கும்.

மார்பு முடி இந்த கருத்து முற்றிலும் உங்கள் விருப்பதிற்கேற்றது . ஆணின் உடல் பகுதியில், குறிப்பாக மார்பு பகுதியில் இருக்கும் முடி குறித்து ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அதனால் உங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் மற்றும் உங்கள் துணையின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நீங்கள் செய்து கொள்ளலாம். நாங்கள் கூறுவது என்னெவென்றால் எப்போதாவது ஒரு முறை இந்த முடிகளை ட்ரிம் செய்யலாம். ஒரு இஞ்ச்சை விட அதிகமாக மார்பு முடிகளை வளர விடாமல் ட்ரிம் செய்வது நல்லது. மார்பு முடிகளை ஷேவ் செய்ய விரும்புவோர், ஷேவிங் க்ரீம் பயன்படுத்தி ஷேவ் செய்யவும். நீங்களாக இதனை முயற்சிக்க வேண்டாம், க்ரீம் இல்லாமல் ஷேவ் செய்யும்போது வெட்டுகள் ஏற்பட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

கால் முடி நீங்கள் ஒரு கால்பந்து வீரராக இல்லாதபோது தேவையில்லாமல் கால் முடிகளை ஷேவ் செய்ய வேண்டாம். கால்களில் முடி இல்லாத ஆண்மகன் பார்பதற்கு கவர்ச்சியாகவும் செக்சியாக இருக்க மாட்டார். முடி இல்லாத கால்கள் பெண்களுக்கு மட்டுமே அழகைத் தரும்.

ஒரே ரேசரை பயன்படுத்துவது உங்கள் ரேசரில் உள்ள பிளேடுகளை அடிக்கடி மாற்றுங்கள். பழைய ரேசர்கள் துரு பிடித்து, அழுக்காகலாம் . இதனால் வெட்டுகளும் அதிகரிக்கலாம். ஷேவிங் ஃபோம் அல்லது ஷேவிங் செய்தபிறகு லோஷன் பயன்படுத்த மறக்க வேண்டாம். முடியை அழகு படுத்துவது அல்லது அதிக முடி வளர்ப்பது உங்களுக்கு விருப்பம் என்றால், அதற்கேற்ற டோனர் அல்லது சீரம் வாங்கி பயன்படுத்தலாம். இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நம்பிக்கைக்குரிய தரமான பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நல்ல விளைவுகளைப் பெறலாம். வழுக்கை பிரச்சனையால் அவதிப்படுகிறவர்களும் இந்த தீர்வை முயற்சிக்கலாம்.

தாடி வளர்ச்சி ஆண்களின் கவர்ச்சிக்கு மகுடம் வைப்பது தாடி. இதனை பல பெண்களும் கூறியிருக்கின்றனர். தாடி ஒரு ஆண்மகனின் ஆண்மையை வெளிபடுத்துவதாகும். இதனால் ஒவ்வொரு ஆண்மகனும் கர்வம் கொள்ளலாம். ஆனால் இதனை வளர்ப்பதில் சில சிக்கல்கள் உண்டு. அடர்த்தி குறைவான முடி, பொன்னிறமான முடி, சீரற்ற முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள் தாடி வளர்க்க முயற்சிக்க வேண்டாம்.