பல ஆயிரங்கங்கள் கொடுத்து ஆடைகளை வாங்கினாலும், பலர் உள்ளாடைகளுக்காக அதிக பணம் செலவு செய்ய விரும்புவதில்லை. உள்ளாடை என்பது தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறக தரமற்ற உள்ளாடைகள் ஆணிற்கு பல பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறது
அதிக வெப்பம் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் உண்டாகும் வெப்பம் உங்கள் விந்தணு வளர்ச்சியை உறிஞ்சுகிறது. இதனால் இறுக்கமாக உள்ளாடைகள் அணிவது உங்கள் கருத்தரிக்கும் திறனை குறைக்க வாய்ப்புகள் அதிகம்.
பிரச்சனைகள் பரிசோதனைகளின் மூலம் இறுக்கமான உள்ளாடையின் அளவான வெப்பநிலை, விந்துவெளியேற்றம், அசாதாரண விந்து அளவு மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவை உருவாக காரணமாக உள்ளது. ஆண்களின் விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் உள்ளாடைகள் மூலம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மருத்துவர்களால் தரமான உள்ளாடைகள் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
அசௌகரியம் வேண்டாம் தங்களது உடலின் வெப்பநிலைக்கு தகுந்தது போல உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். மிகவும் இறுக்கமான, அசௌகரியமான உள்ளாடைகளை அணிவதை தடுப்பது நல்லது. உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கும் போது அது எந்த விதமான ஆடை என்பதை அறிந்திருப்பது அவசியம்.
ஆய்வு இது சம்பந்தமாக மருத்துவர்கள் தோலின் வெப்பநிலை மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தனி நபர்கள் மற்றும் குழுக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் உள்ளாடை அணியாமலும், பலதரப்பட்ட தரங்களில் உள்ளாடைகளை அணிவதற்கும் உண்டான வேறுபாடுகளை அறியப்பட்டது. இந்த ஆய்வின் முடிவானது அதிக வெப்பநிலையால் விந்தணுக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தது. ஆனால் உள்ளாடை அணியாமல் இருப்பதும் ஒருசில பாதிப்புகளை உண்டாக்கும்.
தரமான உள்ளாடைகள் ஒரு ஆணின் விந்தணு ஆரோக்கியத்திற்கு உள்ளாடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் அணியும் உள்ளாடை தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும், பாக்சர்கள் அணியும் உள்ளாடைகளுக்கும் ஒரு சில தரமான உள்ளாடைகளின் வெப்பநிலைக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. பாக்சர்கள் அணியும் உள்ளாடைகள் விந்தணு வளர்ச்சியை அதிகரிக்கும் என எந்தவிதமான அறிவியல் பூர்வமான சான்றுகள் உள்ளன.