ஆண்களின் அந்தரங்கம்:ஆண்களின் வீரமாக, கௌரவமாக, கெத்தாக காணப்படும் விஷயங்களில் முதன்மை இடம் வகிப்பது ஆண்மை. ஆண்மையும், ஆண்குறி அளவும் குறித்து அவ்வளவு சீக்கிரம் ஆண்கள் மத்தியில் பேச்சு எழாது. எழுந்தால்.. நிச்சயம் அதில் சிலர் பொய் கூறியாவது தங்கள் கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள்.
பெரியதா, சிறியதா என்ற பேச்சு என்று மட்டுமில்லாமல்.. சிலருக்கு ஆண்குறி சார்ந்த சந்தேகங்களை வெளியே தெளிவாக கேட்டு அறிந்துக் கொள்ளவும் தயக்கம் இருக்கிறது. எங்கே நம் ஆண்குறி பற்றி தெரிந்தால், அந்த பிரச்சனை பற்றி தெரிந்தால்.. நம்மை ஆண்மை இல்லாதவன் என்று நினைத்துக் கொள்வார்களோ என்று அஞ்சுகிறார்கள்.
இதனால், சிலர் ஆரம்பத்திலேயே அறிகுறிகள் தென்பட்டாலும் அதை சரி செய்துக் கொள்ள மருத்துவர்களை நாடுவதில்லை. இதோ! ஆண்குறியில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுவது எதனால். அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்…
புரோஸ்டேட் கேன்சர்! பிரிட்டிஷில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எட்டில் ஒரு ஆணுக்கு புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. இது வாழ்வின் எந்த வயதிலும் ஏற்படலாம். வருடத்திற்கு பத்தாயிரம் ஆண்கள் புரோஸ்டேட் கேன்சர் காரணியால் மரணிக்கின்றனர். பிரிட்டிஷில் இது இருபது பேர்களில் ஒன்றே என்ற கணக்கில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விந்து வெளிப்படும்… புரோஸ்டேட் கேன்சர் ஏற்பட்டிருக்கலாம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று ஆண்குறி உணர்ச்சியற்று காணப்படுவது. புரோஸ்டேட் கேன்சர் ஏற்பட்டிருந்தால், அந்த கட்டி புரோஸ்டேட்சுரப்பியில் சேதம் ஏற்படுத்தி உணர்ச்சியற்ற உணர்வை உண்டாக்கும். புரோஸ்டேட் சுரப்பி தான் விந்து வெளிப்பட உதவும் நீர்மம் தயாரிக்க உதவுகிறதாம். மேலும், புரோஸ்டேட் கேன்சர் இடுப்புக்கு கீழே அல்சர், புண்கள் போன்றவை உண்டாக செய்யுமாம்.
இறுக்கமான ஆடைகள்! நீங்கள் உடுத்தும் உடையினால் கூட உங்கள் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படலாம். முக்கியமாக ஸ்கின்னி ஜீன்ஸ், இறுக்கமான உள்ளாடை போன்றவைகள் (குறிப்பிட்ட துணி) அதிகமான தாக்கத்தை உண்டாக்கலாம். மிக இறுக்கமாக பல மணி நேரம் உள்ளாடை அணிந்திருந்தாள் நிச்சயம் அது ஆண்குறியில் எரிச்சல், அசௌகரியம் மற்றும் கூச்ச சுபாவத்தை உண்டாக்கும்.
நாள்பட… ஆரம்பத்தில் எரிச்சல் போல உண்டாகும் உணர்வானது, நாள்பட உங்கள் ஆண்குறியின் உணர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருக்கட்டத்தில் உணர்ச்சியின்மை ஏற்படும் அபாயம் நேரிடலாம். இறுக்கமான உள்ளாடைகள் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இரத்த ஓட்டம் தடைப்படும் போது உணர்ச்சியின்மை மெல்ல, மெல்ல அதிகரிக்கும்
பெரோனி நோய்! பெரோனி எனும் நோய் உண்டாகும் போது விறைப்பு நிலையில் ஆண்குறி வளைந்து காணப்படும். இது ஆண்குறி தசையில் காயங்கள் ஏற்படுத்தி உணர்ச்சியின்மையை உண்டாக்கும். மேலும், இதனால் ஆண்குறி அளவும் குறைய வாய்ப்புள்ளது.
வலி! சிலர் மத்தியில் ஆண்குறி விறைப்பின் போது சிறிதளவு வளைந்து காணப்படுவது இயற்கை. அதை எண்ணி யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம். ஆனால், பெரோனி நோயின் போது ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படுவது மட்டுமின்றி, வலி உணர்வும் தென்படும்.
40 வயதுக்கு மேல்… பெரோனி நோய் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை கடினமாக உணர செய்யும். மற்றும் அதிக வலியை உண்டாக்கும். பெரும்பாலும் பெரோனி நோயானது நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் தான் தென்படுகிறது என தேசிய ஆரோக்கிய மற்றும் சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது. ஆனால், இது ஆண்களுக்கு எந்த வயதிலும் ஏற்பட கூடிய நோய் என்றும் கூறுகிறார்கள்.
நரம்பு பிரச்சனை! எந்த வகையிலான நரம்பு பிரச்சனையாக இருந்தாலும், அது ஆண்குறியில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சர்க்கரை நோய், புற்றுநோய், லூபஸ் (தோல் அழி நோய்), வாஸ்குலர் நோய், multiple sclerosis, மற்றும் சில நரம்பு பிரச்சனைகள் காரணமாக ஆண்குறி உணர்ச்சியில் தாக்கம் உண்டாகலாம்.
மெல்ல, மெல்ல… ஆரம்பத்தில் கூச்ச உணர்ச்சி தென்படும், பிறகு உணர்ச்சி மெல்ல, மெல்ல குறைவது போல இருக்கும். சில முறை அதிகமான குளிர்ச்சியான உணர்வு அல்லது குத்துவது போல உணர்ச்சி தென்படலாம். முக்கியமாக சர்க்கரை நோய் காரணத்தால் ஆண்குறியில் உணர்ச்சியின்மை உண்டாக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
செக்ஸ் காயங்கள்! செக்ஸில் ஈடுபடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு செக்ஸில் ஈடுபடும் போது ஆண்குறி முறிவு கூட ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை 47 வயதுமிக்க ஆண் ஒருவர் தன் காதலியுடன் தனக்கு பிடித்தமான நிலையில் உடலுறவு கொண்டிருக்க அவரது ஆண்குறி எதிர்பாராத விதமாக விறைப்பு நிலையில் இருந்த போது முறிந்தது. ஆனால், இதற்கான வாய்ப்பு மிகவும் அரிது.
12 மணி நேரம்! இப்படி விறைப்பு நிலையில் ஆண்குறி முறிவு ஏற்பட்ட நபருக்கு ஏறத்தாழ 12 மணி நேரம் ஆண்குறியில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை என்று கூறப்பட்டது. அபூர்வமாக, அவருக்கு அது சரியாகி, மீண்டும் அவர் இயல்பாக உடலுறவில் ஈடுபடும் நிலைக்கு திரும்பினார். அவர் விறைப்பும் முந்தைய நிலை போலவே அமைந்திருந்தது.
சைக்ளிங்! சைக்ளிங் ஒரு நல்ல உடற்பயிற்சி. ஆனால், பெடல் செய்யும் போது நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அசௌகரியமான அல்லது கூர்மையான முனை கொண்ட இருக்கையில் அமர்ந்து பெடல் செய்து சைக்கிள் ஓட்டும் போது அது ஆண்குறி மட்டுமில்லாது, பெண்குறியிலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரத்த நாளங்கள்! இத்தகைய நேரத்தில் பெண்குறி, ஆண்குறியில் புண் அல்லது எரிச்சல் தென்படலாம். மேலும், இது ஆண்களுக்கு விதைப்பை இடத்தில் தீய தாக்கங்கள் ஏற்படுத்தலாம். கடினமான இருக்கையில் உட்கார்ந்து சைக்கிள் ஓட்டும் போது அது ஆண்குறி மற்றும் அந்தரங்க பாகங்களில் இருக்கும் இரத்த நாளங்களில் தாக்கம் ஏற்படுத்தி உணர்ச்சியில் குறைப்பாடு ஏற்படுத்த வாய்ப்புண்டு.