பெண்கள் வயது அதிகமாகி திருமணம் செய்து கொள்ளும் போது கருவுறுவதில் தாமதம் ஏற்படுவது போல் ஆண்களுக்கும் ஏற்படும் என்கிறது ஆய்வு, அதனால் 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள ஆண்கள் முதலில் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* 22 முதல் 25 வயது ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது. ஆனால் இந்த காலகட்டத்தில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள் என்பதால் 28 முதல் * 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும்.
* 30 வயதிற்கு பின்னர் ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. அதே போல் விந்தணுக்களின் தரமும் குறைகிறது.
* வயதை தாண்டி புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை மற்றும் இறுக்கமான உடை அணிவதாலும் ஆண்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது.
* 25 வயதின் போது இருக்கும் விந்தணுவின் இயக்கம் 30 வயதிற்கு பிறகு பாதியாக குறைந்துவிடும்.
* 35 வயதிற்கு மேல் ஆண்களின் டிஎன்ஏ பாதிப்படைய தொடங்குகிறது. அதனால் 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுவது அவசியம்.