ஆனந்த வாழ்க்கை:பொதுவாகவே திருமணம் செய்யும்போது ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைவாக இருக்க வேண்டும். இது குறைந்தபட்சம் 3 முதல் 6 வயது வரை குறைவாக இருக்க வேண்டும் என்பது உலக நியதி.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களை விட அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதேபோல பெண்கள் வயதில் குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு காரணம் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்யும் போது அவர்களால் பிரச்னைகளை சரியாக கையாள தெரிவதில்லை.
இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுவே வயதில் மூத்த பெண்களை செய்யும் போது அது தவிர்க்கப்படுகிறது.
அவர்கள் பிரச்னைகளை எளிதாக கையாள்கிறார்கள். மேலும் புரிதலோடு கலந்த அக்கறை அதிகமாக இருக்கும். இது தங்களை மேம்படுத்தி கொள்ளவும், புத்துணர்ச்சி அடையும் உதவும் என ஆண்கள் நினைக்கிறார்கள்.
வீட்டை நல்லபடியாக நிர்வகித்து கொள்வார்கள் என்ற எண்ணம் உள்ளது. வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்திருந்தால், அதனை வயது குறைந்த பெண்களால் ஜீரணிக்கவே முடியாது.
ஆனால் வயதில் மூத்த பெண்கள் என்றால் அதனை எளிதில் ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்கும். மேலும் அவர்கள் ஈகோ என்னும் அகம்பாவத்தை கொண்டிருக்க மாட்டார்கள். இது போன்ற காரணங்கள் வயதில் மூத்த பெண்களை விரும்ப காரணமாகிறது.