Home சூடான செய்திகள் ஆண்களின் கண்கள் ஏன் பெண்களின் மார்பங்களை பார்கிறது தெரியுமா?

ஆண்களின் கண்கள் ஏன் பெண்களின் மார்பங்களை பார்கிறது தெரியுமா?

262

சூடான செய்திகள்:ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ‘ இனபெருக்கம் ‘ என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.

நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.

பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை .” தான் எப்படி இருந்தாலும் அழகு தான் ” என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .