Home ஆரோக்கியம் ஆண்களுக்கு அதிகம் தாக்கத்தை உண்டுபண்ணும் நோய்கள்

ஆண்களுக்கு அதிகம் தாக்கத்தை உண்டுபண்ணும் நோய்கள்

72

பொது மருத்துவம்:ஆண் மற்றும் பெண்களின் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புத் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.

இதனால் சில நோய்களின் தாக்கங்கள் கூட ஆண், பெண் பாலினங்களில் வேறுபடுகின்றது. எனவே பெண்களை விட ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதிக்கும் நோய்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆண்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள்
அல்சைமர்
ஆண்களை அதிகமாக பாதிக்கும் அல்சைமர் நோயானது, அவர்களின் 60 வயதிற்கு பின் தாக்குகிறது. இந்த நோயானது, ஒவ்வொரு நாளும் அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சைமர் நோய் ஏற்பட்டதை உணர்ந்து தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவது நல்லது.

டெஸ்டோடிஸ்டிரான் குறைவு
ஆண்களுக்கு வயது அதிகமாகும் போது, அவர்களின் உடம்பில் பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரானும் குறையும். இதனால் உடலுறவில் அதிகமான நாட்டமின்மை, இருப்பதால், அதிகமாக உணர்ச்சிவசப்படும் பிரச்சனைகள் ஏற்படும்.

இதய நோய்
ஆண்களைத் தாக்கும் மிக முக்கிய நோய்களில் இதயநோயும் ஒன்றாகும். இன்றைய காலத்தில் இருக்கும் ஆண்களுக்கு அவர்களின் 40 வயதிலேயே இதய பிரச்சனைகள் தாக்குகின்றது. இதற்கு அவர்களின் மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றது.

புரோஸ்டேட் புற்று நோய்
ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய்களின் வகைகளில், புரோஸ்டேட் புற்று நோய் தான் அவர்களை அதிகமாக தாக்குகின்றது. இதனால் அவர்களின் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதில் வலிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

சர்க்கரை வியாதி
ஆண்களுக்கு டைப்- 2 சர்க்கரை வியாதி அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் அவர்களுக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்ற நோய் ஏற்பட்டு, கண்பார்வை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

மன அழுத்தம்
ஆண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பு மன அழுத்தம் ஆகும். அதிகமான மன அழுத்தம் காரணமாக நிறைய ஆண்க:ளுக்கு தூக்கமின்மை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.