பாலியல் உறவு எவ்வளவு இன்பமானதோ அதேபோல தவறான பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதைவிட அதிக துன்பமானது. பாலுறவு மூலம் பல நோய்கள் பரவினாலும் நாம் அனைவரும் அறிந்தது எய்டஸ் மட்டுமே. ஆனால் அதனை விட பல கொடிய நோய்கள் பாலியல் உறவு மூலம் பரவுகின்றன. அதனை பற்றிய அடிப்படை அறிவு நமக்கு இல்லாதது மிகவும் அபாயகரமானது.
STD(Sexual Transmitted Diseases) அதாவது பாலுறவு மூலம் பரவும் நோய்கள் உடலுறவு மூலம் மட்டும்தான் பரவும் என்ற தவறான எண்ணமும் நம்மிடையே நிலவி வருகிறது. இதுவும் தவறான புரிதல் ஆகும். இந்த பதிவில் இதுவரை நீங்கள் அறியாத பல பாலியல் நோய்களை பற்றியும், அவை பரவும் முறை பற்றியும் பார்க்கலாம்.
சல்மிடியா சல்மிடியா என்பது பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒருவகை பாலியல் நோயாகும். சல்மிடியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் எந்த வழியில் உறவு கொண்டாலும் உங்களுக்கு இந்த நோய் ஏற்படும். இந்த நோய் தாக்கியதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. சிலருக்கு மட்டும் இந்த நோய் தாக்கிய பல வாரங்களுக்குபிறகு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கலாம். இதன் அறிகுறிகளானது சிறுநீர் கழிக்கும் போது வலி, ஆணுறுப்பில் வீக்கம் போன்றவையாகும். இந்த அறிகுறிகள் மறைந்தாலும் நோய் இன்னும் உங்கள் உடலில்தான் இருக்கும். இதனை உடனடியாக குணப்படுத்தவில்லை என்றால் இது ஆண், பெண் இருவருக்குமே ஆபத்துதான்.
வெட்டை நோய் (அ) கோனாரீயா கோனாரீயா என்பது பாக்டீரியா தொற்றுநோயாகும், இது வாய், தொண்டை மற்றும் சிறுநீர்ப்பையை பாதிக்கும். இதுவும் அனைத்து வழி உறவுகள் மூலம் பரவக்கூடியது. இது ஆண்களிடையே எப்பொழுதும் அறிகுறிகளை காட்டாது. சில ஆண்களுக்கு மட்டும் ஆணுறுப்பில் வலி, பச்சை நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பெரும்பாலும் சல்மிடியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோயும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ட்ரைக்கொமோனஸ் பல ஆண்களும், பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதில் என்ன மோசமான நிகழ்வு என்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டதே தெரியாது. இதன் அறிகுறிகள் யாதெனில் பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் போன்றவையாகும்.
ஹெச்ஐவி இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உலகம் முழுவதும் உள்ள பலரும் இந்த நோயை எண்ணி அஞ்சுகின்றனர் என்பதே உண்மை. இது அதிகம் பரவும் முறை பாலியல் உறவாக இருந்தாலும், உபயோகப்படுத்திய ஊசிகள், கர்ப்பமான தாயிடம் இருந்து குழந்தைக்கு என வேறு சில வழிகளிலும் பரவுகிறது. மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிப்பதே இதன் முதல் வேலையாகும். இந்த நோய் தாக்கிய ஒருவரின் ஆயுட்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே. இதற்கு மருந்துகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க இயலவில்லை என்றாலும், இதன் பாதிப்பை குறைக்க பல மருந்துகள் கிடைக்கிறது.
ஹெர்பெஸ் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்(HSV) இது உடலில் அனைவரும் பார்க்க கூடிய இடங்களில் வலி, கொப்புளங்கள், தடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இது அனைத்து விதமான பாலியல் தொடர்புகளாலும் பரவக்கூடியது. இதுவும் எப்பொழுதும் அறிகுறிகளை காட்டாது, ஆனால் ஆண்களை பொறுத்த வரையில் ஆணுறுப்பில் கொப்புளம், புண், யூரித்ராவில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம். ஹெர்பெஸின் புண்கள் வாய்வழி முத்தம் கொடுக்கும்போது பரவக்கூடியது. HSV மூலம் ஏற்படும் புண்களை எப்பொழுதுமே குணப்படுத்த இயலாது.
ஹெச்பிவி ஹியூமன் பாப்பிலோமோ வைரஸ்(HPV) என்பது பரவலாக காணப்படும் பாலியல் நோயாகும். பாலுறவில் ஈடுபடும் 75 சதவீதத்தினருக்கு இது ஏற்பட வாய்ப்புள்ளது. ஆணுறுப்பில் வீக்கம், தடிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதனை தடுப்பூசி மூலம் குணப்படுத்திவிடலாம். நம் உடலுக்கு இயற்கையாகவே இதனை குணப்படுத்த தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெப்பாடிட்டீஸ் பி ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில்மற்ற பாலியல் நோய்கள் பிறப்புறுப்பை சுற்றி பிரச்சினைகளை உண்டாக்கும். ஆனால் இது கல்லீரலை பாதித்து அதில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளானது பசியின்மை, குறைந்த காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், மூட்டுகளில் வலி போன்றவை ஆகும்.
சிபிலிஸ் சிபிலிஸ் என்பது பாக்டீரியா பாலியல் நோயாகும். இது அனைத்து வலி பாலியல் உறவுகள் மூலமும் பரவக்கூடியது. இதில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளது.முதல் நிலையிலேயே இதனை குணப்படுத்தாவிட்டால் இது இரண்டாம் நிலைக்கு முன்னேறி மற்ற உறுப்புகளுக்கு பரவும். இதற்கு பின் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் தொற்றுநோயுடன் இருப்பார்கள், இறுதியாக மூளை பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள்.