சமூகத்தில் ஆண்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள், அவர்களுது எண்ண அலைகள் இப்படி தான் இருக்கும் என கூறப்படும் சில மூட நம்பிக்கைகள் பற்றி கட்டுரை.
பொண்ணுகன்னாலே இப்படி தானப்பா… என கூறும் அதே சமூகம் ஆண்களை பார்த்தும் இந்த வசனத்தை கூற மறந்ததில்லை. ஆண்கள் என்றாலே இப்படி தான், இருபது வரை ஊதாரி, முப்பது வரை உருப்படாதவன்… நாற்பதை கடந்தாலும் பெண்களை ரசிப்பது மட்டுமே அவனது வேலை என ஆண்களை இந்த சமூகம் பல வகைகளில் குறைத்து மதிப்பிட்டு வைத்துள்ளது. அதிலும், முக்கியமாக பெண்கள் விஷயத்தில். பெண்கள் விஷயத்தில் ஆண்களின் விருப்பம் என சமூகத்தின் பார்வையும், பெரும்பாலான ஆண்களின் உண்மை விருப்பம் குறித்தும் இங்கே காணலாம்…
#1 ஆண்கள் எப்போதுமே செக்ஸியான உடை உடுத்தும் பெண்களை தான் விரும்புவார்கள். ஏன்? திருமணமான, ஏற்கனவே காதலிக்கும் ஆண்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஹலோ, எங்களுக்கும் கற்பு இருக்கு! எங்க கிட்டயும் நல்ல பண்பு, குணம் எல்லாம் இருக்கு மைன்ட் இட்!
#2 ஆண்களுக்கு சூப்பர் மாடல் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களை தான் பிடிக்கும். ஆனால், அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல், இந்திய பெண்கள் போன்று இருக்கும் பெண்களை தான் ஆண்கள் விரும்புவார்கள். அழகுப்படுத்திக் கொள்ளும் பெண்களைவிட, இயற்க்கையாகவே அழகாக இருக்கும் பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்! (நம்புனாதா சோறுன்னு சொன்னங்க… நீங்க எப்படி…?)
#3 ஆண்கள் சுதந்திரமாக வாழும் பெண்களை தான் விரும்புவர்கள் என்ற கருத்தும் தவறு. இந்தியாவில் முழு சுதந்திரமும் ஆகாது, கட்டுப்பாடு இன்று சுற்றுவதும் ஆகாது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு கட்டுப்பாடு கலந்த சுதந்திரத்துடன் வாழும் பெண்களை தான் இந்திய ஆண்கள் விரும்புகின்றனர்.
#4 அடங்கி வாழும் பெண்கள் தான் ஆண்களின் விருப்பம் என்பது மலையேறி போய்விட்டது. ஆண்களை அடக்கி ஆளும் பெண்கள் அதிகம் வந்திவிட்டனர். இல்லறத்திலும் சரி, தாம்பத்தியத்திலும் சரி சமநிலையில் பங்கெடுத்துக் கொள்ளும் பெண்களை தான் தற்போதைய இளம் ஆண்கள் விரும்புகின்றனர்.
#5 குழந்தைத்தனமான பெண்களை தான் பிடிக்கும் அவங்க ச்சோ ஸ்வீட், கியூட் என்பது எல்லாம் இப்போது இல்லை. ஸ்மார்ட்டாக நடந்துக் கொள்ளும் பெண்கள் தான் ஆண்களின் சாயிஸ்!
#6 மேக்கப் போடும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும் என்பது குற்ற செயல். பெண்கள் அதிக நேரம் மேக்கப் போடுவதை பார்த்து காண்டாகும் ஆண்கள் தான் இங்கு இருக்கின்றனர். இயல்பாக சாதாரண மேக்கப் போடும் பெண்கள் தான் ஆண்களின் சாயிஸ். கண்ணாடி முன்னாடி மணிக்கணக்கில் செலவிடும் பெண்கள் அல்ல.
#7 ஆண்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் தான். முன்பு போல துன்பத்தில் வாடும் பெண்களுக்கு ஓடி போய் உதவுவார்கள் என்பது சற்றே யோசிக்க வைக்கும் கேள்வி தான். ஏனெனில், பெண்களே இன்று வலிமை அதிகரித்து தான் காணப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். சின்ன, சின்ன உதவிகளுக்கு பெண்கள் ஆண்களின் உதவியை நாடுவதை குறைத்துக் கொண்டனர் என்பதை விட, அவற்றை அவர்களே செய்துக் கொள்ளும் அளவிற்கு உயர்ந்து விட்டனர் என்பது நிதர்சனம்!