சிலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கும். அதாவது கணவனோ அல்லது மனைவியோ அல்லது காதலர்களுக்குள்ளோ, ஒருவருக்கு செக்ஸ் மீது நாட்டம் குறைவாக இருக்கும் அல்லது மூடு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு எப்பப் பார்த்தாலும் அது வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் சில நேரங்களில் லடாய் கூட ஏற்படுவதுண்டு.
செக்ஸ் என்பதே உடல் ரீதியான பசி என்று சொல்லப்பட்டாலும் கூட அது மன ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடே. அந்த உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அப்படித் தோன்றும்போது அதை சரியான வடிகால் மூலம் வெளியேற்றி விடுவதே நல்லது. அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஒருவருக்கு உணர்வுகள் குறைவாக இருக்கும்போது மற்றவருக்கு அதிகம் இருப்பதில் ஆச்சரியமோ, வினோதமோ இல்லை. அது இயல்பான ஒரு விஷயம்.
சில நேரங்களில் இருவருக்குமே நல்ல மூடு இருக்கும், உணர்வுகள் ததும்பி வழியும். அதுபோன்ற நேரங்களில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு வந்து, இன்னொருவருக்கு மூடு இல்லாதபோதுதான் பிரச்சினை வெடிக்கிறது.
ஆனாலும் இதை எளிதில் சமாளிக்கலாம். உங்கள் துணை எப்போது பார்த்தாலும் செக்ஸ், செக்ஸ் என்று உங்களை நச்சரிக்கிறாரா, கவலையை விடுங்கள், அவரை எளிதாக சமாளிக்கலாம்.
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வுகள் அடிக்கடி எழும். அதிலும் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சில பெண்களுக்கு தினசரி கூட செக்ஸ் உறவு தேவைப்படும். ஆனால் அதை சமாளிக்கக் கூடிய மன நிலை பல ஆண்களுக்கு இருப்பதில்லை. இதனால் அந்தப் பெண்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
இருப்பினும் சில டிப்ஸ்களைக் கையாண்டால் அதை எளிதாக சமாளிக்கலாம்….
முதலில் உங்களது மனைவி அல்லது காதலியுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். அவரது செக்ஸ் தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்களால் எப்படி முடியும், என்ன முடியும், எந்த சமயத்தில் சாத்தியம் என்பதை உங்களது மனைவி அல்லது காதலிக்கு மென்மையான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லுங்கள். உங்களது வேலைப்பளு குறித்து விளக்குங்கள், உங்களது உடல் நலம் குறித்துச் சொல்லுங்கள். இந்த விவாதம் மிகவும் மென்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது கெப்பாசிட்டி குறித்து அவருக்குப் புரியும் வகையில் விளக்கி விட்டால், அதற்கேற்ப அவரும் உறவுகளை திருத்திக் கொள்வார், காதலும், காமும், பிரச்சினையில்லாமல் கை கோர்த்துச் செல்ல இது உதவும்.
அடிக்கடி காமவயப்படுவது நோயோ அல்லது பிரச்சினையோ அல்ல.
அது இயல்பான உடல் வேட்கைதான். இதை உங்களது மனைவிக்கு நீங்கள் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல எப்போதெல்லாம் நாம் இயல்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் எனப்தையும் அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதேபோல அவரது தேவைகள், கருத்துக்களையும் உன்னிப்பாக கேளுங்கள். போதுமான செக்ஸை நான் தருகிறேன், அதற்காக இவ்வளவு நேரம் வேண்டும், இந்த நேரமெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஒவ்வொரு முறையும் திருப்தி கிடைக்கிறதா என்பதை மட்டும் பார் என்று அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ‘குவான்டிட்டி’யை விட ‘குவாலிட்டி’யே முக்கியம் என்பதை அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள், நிச்சயம் புரிந்து கொள்வார்.
நீ ஒரு செக்ஸ் அடிமை அல்ல என்பதையும் உங்களது மனைவி அல்லது காதலிக்குப் புரிய வையுங்கள். இதை நினைத்து வருத்தப்படாதே, இது இயல்பானதுதான். அதேசமயம், உனது உணர்வுகளுக்கு நான் நிச்சயம் பட்டினி போட மாட்டேன், தேவைப்படும்போது தருவேன், அதேசமயம், நீயும் நினைத்த நேரத்தில் எதிர்பார்க்காதே, அது மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே நீயே திட்டமிட்டு கூறு, அதன்படி செயல்படுவோம் என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
முக்கியமாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவி அல்லது காதலி செக்ஸ் தேவை என்று கேட்கும்போது அதைத் தவிர்க்க முயலாதீர்கள், தப்பிப் போக நினைக்காதீர்கள். மாறாக அப்போது உள்ள உங்களது மனநிலைக்கு ஏற்ப அவரிடம் பக்குவமாக கூறி அதற்கேற்ற வகையில் சின்னதோ, பெரியதோ நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான உங்களது துணையின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்தில் தள்ளாமல் இருக்க உதவும்.
வார இறுதி நாட்களை சிறப்பாக மாற்றியமையுங்கள். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அவர் கேட்பதையெல்லாம் செய்யுங்கள், சொல்வதையெல்லாம் செய்யுங்கள். அதற்கேற்ப உங்களது பணி நேரம், பெர்சனல் வேலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் மீது அவருக்கு பாசம் அதிகரிக்க உதவும்.
மொத்தத்தில் உங்களது மனைவியின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு, உங்களது நிலையையும் அவருக்கு விளக்கி இருவரும் ஒரு சேர ஒரு முடிவெடுத்து அதன்படி செயல்படும்போது எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு மத்தியில் ஊடுறுவ முடியாது.