Home பாலியல் இயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி

இயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி

62

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும்.

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட இந்த இயற்கை வழியை பின்பற்றலாம்.

சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை – தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

காலையில வெறும் வயிற்றில் கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் எதுவானாலும் சாப்பிடனும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். இது உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவை நடக்கிற போது, ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம். எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.

எப்போதும் சமையலறையில் கிடைக்கக் கூடிய வெல்லம், உங்கள் மாதவிடாயை முன்பாகவே தூண்டுவதில் சிறந்த வீட்டு மருத்துவமாகும். எள் விதைகளுடன் வெல்லத்தைச் சாப்பிடவும் அல்லது ஒரு டம்ளர் இஞ்சிச் சாறுடன் வெல்லத்தை, வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முன்பாகவே வரவழைப்பதில் உதவும் என்று நம்பப்படுகிறது.

முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.