Home ஆரோக்கியம் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள்

மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள்

27

பெண்ணோயியல் நோய்கள், தாக்குதல்களைப் பற்றி பேசவும், மருத்துவரிடம் செல்லவும் இன்றும் பல பெண்கள் மருத்துவரிடம் வருவதில்லை. பிரச்சினை கூடும் பொழுது சிகிச்சையும் கடினமாகி விடுகின்றது. ஆகவே பெண்கள் அறிய வேண்டியது.

* வருடா வருடம் பெண்களுக்கான சில பிரத்யேக பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

* ஒழுக்கமான உடல் உறவு தனி மனித ஒழுக்கம் மட்டுமல்ல. 20 வகையான நோய்கள் ஒழுக்கமற்ற உடல் உறவுகளால் பரவுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து எய்ட்ஸ் உட்பட பல பாதிப்புகளை கொண்டு வந்து விடும்.

* உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை நீக்கும். மாதவிலக்கு வலியின்றி இருக்கும்.

* உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.

* 30 வயதிற்குள் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது.

* பிறப்புறுப்புகளை கடின, கார சோப் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.

* மாதவிடாய் நிற்கும் காலத்தில் பல பெண்கள் சில பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களை இக்கால கட்டத்தில் தாவர உணவினை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது.

* மாதவிலக்கு காலத்தில் வயிற்றை இழுத்து பிடித்து வலி, கால் வலி இவற்றினை அனுபவிப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று ஒமேகா, கால்ஷியம் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

* மாதவிலக்கு முறையற்று இருந்தால் முதலில் எடையினை கவனியுங்கள். அதிக மனஉளைச்சல் கூட காரணம் ஆகலாம். தைராய்டு பிரச்சனை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியினை அன்றாடம் செய்யுங்கள்.

* சிலருக்கு மாதவிலக்கு சுற்றின் நடுவில் சிறு சிறு ரத்த திட்டுகள் ஏற்படலாம். பாலிப்ஸ் எனப்படும் கருப்பை வாய் இவற்றில் ஏற்படும் சதையின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம். மருத்துவர் இதனை பரிசோதித்து நீக்கி விடுவார்.

* சிலருக்கு மாதவிலக்கிற்கு ஓரிரு நாட்கள் முன்பு ஒருவித மனசோர்வு, பயம், எரிச்சல், சக்தி இன்மை, அதிகம் எதனையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். அதிக பழங்கள், காய்கறிகள், நார்சத்து கூடிய உணவு இவை தீர்வு கொடுக்கும். அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால் மிகவும் குறைத்து கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெற்று பி-காம்ப்ளெக்ஸ், கால்ஷியம் சத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராயின் அதனை மருத்துவரிடம் அவசியம் சொல்லவும்.

ஆரோக்கியமான உணவும் கருத்தரிக்க உதவும்.

* புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை கருத்தரிக்கும் காலத்தில் மிக அவசியம்.

* பாதாம் பருப்பு, பூசணி விதை, பாதாம், ஃப்ளாக்ஸ் விதை, சியா விதை இவை கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள்.

* அடர்ந்த பச்சை நிற இலைகள், காய்கறிகள் இவைகளில் வைட்டமின் பி6 நிறைய கிடைக்கும். இவை ஹார்மோன்களை சீராக வைக்க உதவும்.

* முட்டை சிறந்த புரோட்டின் உடையது. விந்து அணுக்கள் குறைபாடு உடையவர்கள் மருத்துவத்துடன் இதனையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* பூசணி விதையிலுள்ள தாது உப்புகள் விந்து அணுக்களின் தரத்தினை உயர்த்துகின்றது.

* வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி இவை ஆண், பெண் இருவருக்கும் சிரந்தது.

* டின்னில் அடைத்த உணவுகள்,

* அதிக சர்க்கரை உணவு,

* ஃகேபின், செயற்கை சர்க்கரை, நிறக்கலப்பு,

* ஆல்கஹால் ஆகியவை ஆகும்.

ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இது அவரது தாய், பரம்பரை மற்றும் வேறு சில காரணங்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.

* வயிற்றினைச் சுற்றி எடை கூடுதல்

* பிறப்புறுப்பு வறட்சி ஆகலாம்.

* சிறுநீர் பாதை, சிறுநீர் பையில் கிருமி தாக்குதல்

* கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.

* இக்கால கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் * சேனை, * சோயா, * ஃப்ளாக்ஸ் விதை, * வைட்டமின் சி சத்து பழங்கள், * மனஉளைச்சல் இன்றி இருத்தல், * தேவையான நீர் அருந்துதல் ஆகியவை சிறந்தது.

மார்பக புற்று நோய்:- மார்பக புற்று நோய் பற்றி இன்றைய கால கட்டத்தில் அதிக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகின்றது. நம் வாழ்க்கை முறையில் உணவு, உடற்பயிற்சி இவைகளை கடைபிடித்தாலும் குடும்பம், பரம்பரை, பெண் உறுப்புகள், மார்பக அடர்த்தி இவைகளும் மார்பக புற்று நோய்க்கு காரணம் ஆகின்றன.

* அதிக எடை, * உழைப்பின்றி இருத்தல், * மது போன்றவையும் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

உடற்பயிற்சி இதனை தவிர்ப்பதில் முக்கிய பங்கு பெறுகின்றது. முறையான சுய பரிசோதனை (உங்கள் மருத்துவர் சொல்லிக் கொடுப்பார்) மற்றும் மருத்துவ பரிசோதனை என்பது அவசியமாகின்றது.

பதட்டம்:- பதட்டம் பல விதங்களில் ஒருவரிடம் வெளிப்படும். கை, கால் நடுங்கும். சிலருக்கு நெஞ்சு பிடிப்பு போல இருக்கும் என பலவற்றினை கூறலாம். பதட்டம் என்பது ஒருவகை பயம். நிம்மதி இன்மை, ஏதோ இல்லாத ஒன்று இருப்பதாக நடந்து விடப்போவதாக நினைக்கும் பயம். ஆனால் இந்த பதட்டம் மனிதனை மிகவும் பாதிக்கின்றது என்பதால் இதிலிருந்து வெளிவருவதனை செயல்படுத்த வேண்டும்.

* பலருக்கு எப்பொழுதும் ஒரு பீதி இருக்கும். தான் வேலை செய்யும் இடத்தில், பலர் இருக்கும் கூட்டத்தில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தேவையில்லாத பீதி இருக்கும். அதிகம் வியர்க்கும், நெஞ்சு படபடக்கும்.

* சிலருக்கு இரவில் தூக்கமே வராது. அதிக சோர்வு இருக்கும். ஆனால் தூக்கம் வராது. இதற்கு காரணம் மனஉளைச்சலால், மூளை இரவில் ஓய்வு எடுப்பதில்லை.

* சிலருக்கு அன்றாட சாதாரண வேலைகள் செய்வதே மூச்சு வாங்கும்.

* சிறு சத்தம் கூட இவர்களுக்கு அதிர்வு ஏற்படும்.

* ஏதோ எல்லாமே சரியாக நடக்காதது போல் இருப்பர்.

* வாய் வறண்டு இருக்கும்.

* கால், கைகள் வியர்த்த படியே இருக்கும்.

* வயிற்று பிரட்டல், வாந்தி அடிக்கடி இருக்கும்.

* உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகு பிரச்சினைகளிலிருந்து அவசியம் வெளிவர வேண்டும். முதலில் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி சதைகளை வலுவாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இவை தெரிந்ததே. உடற்பயிற்சியின் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக இப்பொழுது கூறப்படுகின்றது. உறுதியாக கூற மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் அதனை இங்கு விவரித்துக் கூறவில்லை.

அவ்வப்போது ‘உண்ணா விரதம்’ இருப்பதால் மூளையிலுள்ள திசுக்களில் சேரும் நச்சுக்கள் சுத்தமடைவதாகவும் கூறப்படுகின்றது.

க்ரீன் டீ, மஞ்சள், ஒமேகா 3 இவைகள் மிக நன்மைகளை பயப்பதால் ஒருவரின் ஆரோக்கியம் கூடுவதன் மூலம் பதட்டம் குறைகின்றது. யோகாவும், தியானமும் ‘பதட்டம்’ குறைய மிகச் சிறந்த வழிகளாகும்.