Home ஆரோக்கியம் மாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? பெண்களே தெரிஞ்சுகோங்க ...

மாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? பெண்களே தெரிஞ்சுகோங்க மாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? பெண்களே தெரிஞ்சுகோங்க

1294

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான நாட்களில் மாதவிடாய் வருவதில்லை, ஏதேனும் ஒரு நாட்கள் முன் அல்லது பின் சென்றுவிடும்.

இதனால் பெண்கள் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளாமல் போவதும் உண்டு. இதனால் திருவிழாக்கள் பூஜை, திருமணம் போன்றவற்றிற்காக மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள்.

அப்படி நினைக்கும் பெண்களுக்கு தான் இது, அதை நாம் இயற்கை முறையிலே செய்யலாம்.

உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.

விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
பப்பாளி
இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ஓம விதைகள்
ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

எள்
எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
வெந்தயம்
மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.

வெள்ளரி
மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.

பொட்டுக்கடலை
பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.