Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள…

மார்பகத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள…

33

captureஅழகைப் பராமரிப்பதில் முகம், மற்றும் சருமப் பராமரிப்பு மட்டுமே போதுமானதல்ல. அதுமட்டுமே முழு அழகையும் வெளிப்படுத்தாது.

ஆண், பெண் இருவருக்குமே மார்பகம் என்பது மிக முக்கியமான, பாலின வேறுபாட்டை உணர்த்தக்கூடிய புறத்தோற்ற அமைப்பு. அதில் பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கப்படுகின்றன.

ஆணின் இச்சையைத் துண்டக்கூடிய பெண்ணின் மார்பகங்கள் சிக்கென்று இறுக்கமாக இருக்க வேண்டுமென்று தான் ஆண், பெண் இருவருமே விரும்புவார்கள். ஆனால் பெண்கள் தங்களுடைய மார்பகங்களைச் சரியாகப் பராமரிக்காததாலும், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் மார்பகங்கள் தளர்ந்து காணப்படுவதுண்டு. அப்படி தளர்ந்திருக்கும் மார்பகத்தை எப்படி சிக்கென வைத்துக் கொள்வது?

வீட்டிலேயே இதற்கான மாஸ்க்கை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1

முட்டை வெள்ளைக்கரு – 2

செய்முறை

வெள்ளரிக்காயைத் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்றாகப் பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அந்தப் பேஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சுர்த்து நன்றாகக் கலந்து, அந்த கலவையை மார்பகங்களில் தடவி, அரை மணி நேரம் வரை உலரவிட வேண்டும். நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.

இந்த வெள்ளரிக்காய் மாஸ்க்குடன் நான்கு ஸ்பூன் அளவுக்கு முட்டைகோஸ் சாறினையும் சேர்த்துக் கொள்ளலாம்.