Home ஆண்கள் கஞ்சாவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும்

கஞ்சாவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும்

32

காதல் புரியும் போது, நேரம் அனைத்திலும் முக்கியமானதாக இருக்கிறது. அது கருத்தறித்தல் செயல்முறையிலும் இருக்கிறது.

ஒரே ஒரு விந்தணு முழு வேலையும் செய்ய போதுமானதாக இருக்கும் போது ஏன் ஆண்களுக்கு மில்லியன் கணக்கான விந்தணு இருக்கின்றது என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில், கருவுறுதல் செயல்முறை மக்கள் நினைப்பதையும் விட மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. விந்தணு கருமுட்டை குழாய்க்குள் மேலேறிச் சென்று நேர்த்தியான முட்டையைக் கண்டறியும் செயல்பாடானது “கண்ணாமுச்சி” விளையாட்டு விளையாடுவதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இந்த செயல்முறையில் இடைஞ்சல் ஏற்படுத்துவதில் பல காரணிகள் பொறுப்பாகின்றன. மரிஜூவானா இத்தகைய இடைஞ்சல் ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். இது குறித்தும், மலட்டுத்தன்மை ஏற்படுவதில் இதன் விளைவுகள் குறித்தும் பெருமளவிலான சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன.

மரிஜூவானா என்றால் என்ன?

கஞ்சா என்று இந்தியாவில் பரவலாக அறியப்படும் மரிஜூவானா என்பது தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு மருந்துப் பொருள் ஆகும். இதனை புகைப்பதாலோ அல்லது உட்செலுத்துவதாலோ நீங்கள் அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வை அடைவீர்கள்.

ஆண்களுக்கு, சில ஆய்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், மரிஜூவானா பயன்படுத்துவதற்கும், கருவுறும் தன்மை குறைவதற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மரிஜூவானா அடிக்கடி புகைக்கும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விந்து திரவ அளவு குறைவு, மொத்த விந்தணு எண்ணிக்கை குறைவு, பிறழ்ந்த விந்தணு முதலியவை குறிப்பிடத்தக்களவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

விந்து தரம் குறைவு

2008 – 2012 ஆண்டுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட டேனிசைச் சேர்ந்த 1215 இளம் ஆண்கள் இராணுவ சேவைக்காக அவர்களது உடல் தகுதியைத் தீர்மானிப்பதற்காக கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் விந்து மாதிரி, இரத்த மாதிரி மற்றும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அதனை நிரப்புவதற்கு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் 45% பேர் கடைசி 3 மாதங்களில் மரிஜூவானா புகைத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் முடிவுகள் – அவர்களில் வாரத்திற்கு ஒரு முறைக்கும் மேல் தொடர்ந்து மரிஜூவானா புகைத்த 28% நபர்கள் குறைந்த விந்து செறிவினைக் கொண்டிருந்தனர். மேலும் வாரத்திற்கு ஒரு முறைக்கும் மேல் மரிஜூவானா பயன்படுத்துவதுடன் மற்ற புத்துணர்வு பானங்கள் பருகியர்வர்களுக்கு விந்து செறிவு 52% குறைந்திருந்தது.

அந்த ஆய்வில் ஆண்களுக்கு விந்து தரம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. அது விந்து செயல்பாட்டை பாதிப்பதுடன் விந்து எண்ணிக்கையையும் குறைக்கிறது.

விறைப்பின்மை

குறைந்தது 3 மாதங்கள் விறைப்பின்மை ஏற்பட்டதாக புகார் அளித்த 64 ஆண்களையும் உள்ளடக்கி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து நோயாளிகளுக்கும் அவர்கள் பருகிய போதை மருந்தின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, டைனமிக் பெனைல் ட்யூப்ளக்ஸ் அல்ட்ராசவுண்ட் (PDU) செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு, நாள்பட்ட மரிஜூவானா பயன்பாடு ஆரம்ப அகச்சீத சேதம், விறைப்பின்மைக்கு வழிவகுக்கும் இன்சுலின் எதிர்ப்பு முதலியவற்றை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது.

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி:                                                                                                                                   
மனிதர்களின் இனப்பெருக்க அமைப்புகளை ஒத்த விலங்குகளுக்கு கானாபினோய்டுகள் உட்செலுத்தப் பட்டன. இது அவைகளது விரைகளைக் கட்டுப்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் அவற்றின் மூளைக்கு கடத்தும் இயல்பான செய்தியில் மாற்றம் செய்கிறதா என்பதை சோதனை செய்ய மேற்கொள்ளப்பட்டது. அதில் விரைகளில் டெஸ்டோஸ்டிரோன் உருவாக்கம் மற்றும் வெளிப்படுதலில் பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. மேலும் மூளை ஹார்மோன் உற்பத்தியில் ஒழுங்குபடுத்தும் வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது கண்டறியப்பட்டது.