Home காமசூத்ரா மார்பகம் (முலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்பகம் (முலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

190

மார்பகம் என்பது பெண் பாலூட்டிகளில் காணப்படும் முக்கியமான உறுப்பு.முலைச் சுரப்பிகள் மாற்றமடைந்த வியர்வைச் சுரப்பிகள் ஆகும். பிறந்த குழந்தைகளுக்கு உணவாகப் பாலை உற்பத்தி செய்து வழங்குவது இதன் தொழிலாகும். பல பண்பாடுகளில் பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணிவதே பண்பாட்டுக்கு ஒத்தாகக் கருதப்படுவதுடன் சமூகத்தினால் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பழங்குடி மக்களிடையே மார்பகங்களை மூடி உடையணியும் வழக்கம் இல்லை. ஆண் பாலூட்டிகள் குட்டிகளுக்குப் பாலூட்டுவது இல்லையாதலால் அவற்றுக்கு வளர்ச்சியடையாத மார்பகங்களே உண்டு.

வளர்ச்சியும் வடிவமும்

சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் பூப்பெய்திய பின்னரே மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இவற்றின் வடிவங்கள்

பல்வேறுபட்டவையாக அமைகின்றன. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மார்பகங்கள் தளர்வடையத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவது இதனை விரைவுபடுத்தும் என்ற கருத்து நிலவினாலும், சில ஆய்வு முடிவுகள் இதனை மறுக்கின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அமைப்பு

மார்பகத்தின் ஒரு பகுதி சுரப்பியாகும். இது குழந்தை பெற்ற பெண்களில் அவற்றுக்கு உணவளிப்பதற்காகத் பாலை உற்பத்தி செய்கிறது. தாயின் மார்பகங்களில் உற்பத்தியாகும் பால் தாய்ப்பால் எனப்படுகின்றது. தாய்ப்பாலே குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.