Home உறவு-காதல் சிக்கனமான முறையில் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்துவதற்கான வழிகள்!!!

சிக்கனமான முறையில் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்துவதற்கான வழிகள்!!!

85

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.

உங்களால் முடிந்தால் தான் ஒரு வைர நெக்லசை வாங்க முடியும். சந்தோஷத்தின் அளவு உங்களிடம் உள்ள பணத்தை பொருத்து அல்ல. அவர்களுக்கு விருப்பமான ஒரு ச்வீட் அல்லது ஒரு சினிமா டிக்கெட் கூட இதற்கு சமமாக கருதப்படும். உங்களின் நினைவுகளில் அவர் இருப்பது தான் அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். இது உங்களின் உறவை நீங்கள் கற்பனைபண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வலிமைப்படுத்தும். சில நேரங்களில் இந்த சந்தோஷங்கள் உங்கள் சண்டைகளுக்கும் ஊடல்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும். உங்கள் மனைவியின் பிறந்தநாள் அல்லது வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே பரிசளிக்க வேண்டும் என்பது கிடையாது. உங்கள் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை அவர்களுக்கு என்று ஒதுக்கி வைத்து நீங்கள் விரும்பும் போது பரிசளிக்கலாம். இன்று கடைகளில் ஆண்கள் பெண்களின் உள்ளாடைகளை வாங்குவது நாகரிகமாக மாறிவருகின்றது. அதனால், நீங்கள் அதற்குகூட தயங்கவேண்டாம்.

ஒரு ரோஜாகொத்து அல்லது உங்கள் மனைவியின் விருப்பமான கலரில் பூங்கொத்து பரிசளிப்பது கூட அவர்களை சந்தோஷப்படுத்தும். இந்த பூக்கள் வெறும் 50 ருபாய் செலவில் அடங்கிவிடும்.

உங்கள் சொந்த வார்த்தைகளாலான வாழ்த்து அட்டை கூட பரிசளிக்கலாம். முக்கியமாக அதில் நீங்கள் கைப்பட எழுதிய சொந்த வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

ஒரு பாக்ஸ் சாக்லெட் அவர்களை கண்டிப்பாக ஏமாற்றாது. சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் சிரிப்பை அவர்கள் முகத்தில் வரவழைக்கச் செய்யும். இதய வடிவிலான ஒரு சாக்லெட் பாக்ஸ் வெறும் 200 ரூபாய்களில் இருந்து கிடைகின்றன.

உங்கள் மனைவியின் விருப்பமான ஹீரோவின் படம் உங்கள் ஊர் தியேட்டரின் வந்தது என்றால் கண்டிப்பாக அவர்களை சினிமாவிற்கு அழைத்து போக மறந்து விடாதீர்கள். அந்த படம் நன்றாக இல்லாவிட்டாலும் அவர்களை அது சந்தோஷப்படுத்தும்.

உள்ளாடைகள் வாங்குவதற்கு முதலில் சற்று கூச்சமாகவும் வெக்கமாகவும் இருக்கும்.ஆனால் முதல் தடவை வாங்கியபிறகு அதில் நீங்கள் தேர்ந்தவர் ஆகி விடுவீர்கள். இது அவர்களின் சந்தோஷத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒரு சுவாரசியமான வழியாகும்.

சிக்கனமான முறையில் நீங்களே உங்கள் மனைவிக்கு மசாஜ் செய்யாலாம். அப்படி செய்யத் தெரியாதவர்கள், உங்கள் மனைவியை மசாஜ் செய்யும் இடத்திற்கு அழைத்து சென்று மசாஜ் செய்யவிடுங்கள்.

அவர்களின் பிறந்த வீட்டிற்கு செல்ல நாம் பெரிதும் விரும்புவது இல்லை. ஆனால், அவர்களின் சந்தோஷத்திற்காக செல்லுவது பெரிய காரியம் அல்ல. இதன் மூலம் நீங்கள் அவர்களிடம் வைத்திருக்கும் அக்கறையும் அன்பையும் வெளிப்படுத்தி அவர்களை இம்ப்ரெஸ் பண்ணலாம்.

நீங்கள் சமையலில் வல்லுனராக இல்லாவிட்டாலும், சில நாட்களில் நீங்கள் அவர்களுக்கு சமையல் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தலாம். இதில் பெரிதாக செலவு இல்லாததால், அவர்களின் அன்பையும் அக்கறையையும் எளிதாகப் பெறலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகள் மிகவும் பிடிக்கும். உங்களால் பணத்திற்கு என்ன முடிந்ததோ அதனை கொண்டு அவர்களை ஆச்சரியப்படுத்தலாம். படுக்கை அறையை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அவர்களின் அன்பை மேலும் வலுவடையச்செய்யலாம்.