புரளி பேசுவது, கிசு, கிசு பேசுவது என்பது பெண்களிடம் அதிகம் காணப்படும் குணாதிசயங்களில் ஒன்று. ஆனால், சிலருக்கு இது அடிக்ஷனாக இருக்கும். மற்றவர் வாழ்க்கை பற்றி பேசாமல், அதை பலரிடம் கூறாமல் அவர்களால் தூங்க முடியாது. ஒரு நாள் தோழிகளுடன் கூடி புரளி பேசாவிட்டால் பதட்டமடைய ஆரம்பித்துவிடுவார்கள். எப்படி தினமும் குடிக்கும் ஒருவருக்கு ஒருநாள் குடிக்காமல் போனால் கைகால் உதறுமோ, அப்படி தான் இதுவும். ஒரு பெண் புரளி பேசுவதற்கு அடிக்ட் ஆகிவிட்டார்கள் என்பதை இந்த அறிகுறிகளை வைத்து அறிந்துக் கொள்ளலாம்…
அறிகுறி #1 வேலை முடிந்து வீடு புகந்ததுமே அக்கம்பக்கத்து வீடுகளை பற்றி புரளி பேச துவங்குவது.
அறிகுறி #2 எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு மீறி ஊதி பெரிதாக்கி சொல்லும் மனோபாவம். அறிகுறி #3 நேரம் கிடைக்கும் போதெல்லாம், தோழிகளை வீட்டிற்கு அழைத்தோ, கால் செய்தோ அதிகமாக மற்றவர் பற்றி பேசி மகிழ்தல்.
அறிகுறி #4 மற்றவர் பற்றி நீங்கள் பேசும் போது, சந்திரமுகி ஜோதிகா போல கண்களை பெரிதாக்கி கேட்க துவங்குவது.
அறிகுறி #5 மற்றவர் வாழ்க்கை பற்றி கேள்வி கேட்டு அறிந்துக் கொள்ள ஆர்வம் கட்டுவது.
அறிகுறி #6 மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அதை தானும் பகிர்ந்துக் கொள்ள மறுப்பது.
அறிகுறி #7 மற்றவரின் வாழ்க்கையுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருப்பது.
அறிகுறி #8 தன்னை பற்றி பேச, தான் சந்தோசமாக இருக்க பல விஷயங்கள் இருக்கும் போதிலும் கூட, மற்றவருடைய வாழ்க்கை பற்றி பேசுதல்.