Home ஆரோக்கியம் பொது மருத்துவம் மன உளைச்சலே நோய் பாதிப்புக்கு காரணம்

மன உளைச்சலே நோய் பாதிப்புக்கு காரணம்

49

இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 68 மில்லியன். உலகில் சர்க்கரை நோய் பாதிப்புடையோர் எண்ணிக்கை 381 மில்லியன்கள்.

ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இவற்றினால் இவற்றுக்கான மருந்துகளை வாங்குவதில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே கூட சென்று விடுகின்றனர்.

அதிக நோய் பாதிப்பிற்கு காரணம் மனிதனின் அதிக மன உளைச்சலே என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் உண்ணும் பொழுது அதிக மனஉளைச்சலுடனும், வேதனையுடனும் இருந்தால் அவரது…

* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* வெள்ளை அணுக்கள் குறையும்.
* இன்சுலின் செயல்பாடு குறையும்.
* உடலில் அதிக சர்க்கரை குறையும்.

* நல்ல மனநிலையோடு உண்ணும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் சீராய் இருக்கும்.
* இன்சுலின் செயல்பாடு முறையாய் இருக்கும்.
* சர்க்கரை முறையான அளவில் இருக்கும்.

ஆய்வுகள் கூறும் மற்றொரு செய்தி நோயிலிருந்து வெளி வருவோம் என்று முதலில் நம்பிக்கை வையுங்கள். இந்த எண்ணங்கள் உங்களது
* லிம்பிக் சிஸ்டம் இதில் பதிவாகும்.
* ஹைப்போ தலாமஸ் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* பிட்யூட்டரி மூலமாக ஹார்மோன்கள் செயல்பாடு சீராகும்.
* முறையற்ற உடல் செயல்பாடு சீராகும்.
* நோயிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

பிறருக்கு முன் வந்து உதவுபவர்கள் நீண்ட நாள் ஆரோக்யத்துடன் வாழ்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதையெல்லாம் இங்கு எழுதுவதன் காரணம் சர்க்கரை நோயாளிகள் வாழ்வில் மிகவும் மனம் சோர்ந்து விடுகின்றனர். மன உளைச்சல் அதிகம் அடைகின்றனர். தன் நோயினைப் பற்றிய கவலையே அவர்களை முழுவதும் ஆட்கொண்டு விடுகின்றது. வாழ்க்கையின் பல நல்ல மகிழ்வுகளை தேவையின்றி இழந்து முடங்கி விடுகின்றனர். இதில் 85 சதவீத மக்கள் கண் பார்வை பாதிப்பு மற்றும் கண் பார்வை இழப்பினை அடைகின்றனர். 20-28 சதவீத மக்கள் சிறுநீரக பாதிப்பினை அடைகின்றனர். 50-70 சதவீத மக்கள் நரம்பு பாதிப்பினை அடைகின்றனர்.

அதிகம் சமைத்த உணவுகளாலும், பொரித்து, வறுத்த உணவுகளாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக தீமை என்பதனை இன்னமும் மக்கள் உணராமல் இருக்கின்றார்களே என்பது சிந்திக்க வைக்கின்றது. பதப்படுத்தி டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளால் ரத்தத்தில் அதிக சர்க்கரை கூடும் என்பதனை நகர்புற மக்களுக்கு பலமுறை சொல்லும் அவசியம் ஏற்படுகின்றது.

அசைவம், பால், பால் சார்ந்த உணவுகளான க்ரீம், சீஸ் போன்றவற்றினால் அதிக சர்க்கரை ரத்தத்தில் கூடும். இவை அனைத்தும் மக்களுக்கு புரிந்திருந்தால், புரிந்த படி நடைமுறைப்படுத்தி இருந்தால் இன்று சர்க்கரை நோயால் ஏற்படும் கடும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆக இதனை தினமும் திருக்குறள் போல திரும்ப திரும்ப படியுங்கள் எனச் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் போராட்டத்தால் சோர்வுறும் மனிதனுக்கு பழக்கப்பட்ட உணவு முறைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் உத்வேகம் இல்லை. இதுவே அவனது நோய் முற்றுவதற்குக் காரணமாகின்றது. ஆகவே சில எளிய முறைகளை அவனுக்குச் சொல்லித் தர வேண்டியது மருத்துவ உலகின் கடமை ஆகின்றது.

* சர்க்கரை, சர்க்கரை அதிகமாக புட்டியில் அடைப்பட்ட பானங்கள் – வெகு வேகமாய் ரத்தத்தில் சர்க்கரையினை ஏற்றும்
* பாலிஷ் செய்த அரிசி, கோதுமை உணவுகள் – எளிதில் சர்க்கரையினை கூட்டும்
* பழங்கள் – நார் சத்து இருந்தாலும் அளவாய் உண்பது நல்லது.

* காய்கறிகள் – சாலட் எனப்படும் சமைக்காத முறையில் – மிகச் சீரான அளவிலேயே சர்க்கரை இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் என்றில்லாமல் அனைவருமே உணவுக்கு 1/2 மணி நேரம் முன்பு வெள்ளரி, தக்காளி, கொடைமிளகாய், கோஸ், பிஞ்சு சோளம், சின்ன வெங்காயம், சுரைக்காய் போன்ற காய்கறிகளில் 4-5 காய்கறிகளை தலா 50 கிராம் அளவு எடுத்து சுத்தம் செய்து துருவியோ, பொடிதாக அரிந்தோ அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து சாலட் என்ற முறையில் உண்ணலாம். மூன்று வேளையும் இவ்வாறு செய்யலாம்.

இரு வேளை உணவிற்கு நடுவே ஏதேனும் ஓரிரு பழங்களில் சில துண்டுகளை எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியினை ஏதோ ஒரு வேளை எப்படியாவது சேர்த்துக்கொள்ளலாம். வட இந்தியர்கள் அநேகர் காலையில் 10 துளசி இலையும், சிறிது துண்டு இஞ்சியும் மென்றுசாப்பிட்டு அரை மணி சென்ற பிறகே ஏதேனும் உட்கொள்கின்றனர். ஆக முறையான உணவுப்பழக்கமும், சுகாதாரமும் அநேக நோய்களை தவிர்த்துவிடும் என்பதனை அறிய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமே இருதய நோய்க்கும் பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகின்றனர் என்பதில்லை. அனைவருமே இத்தகு பாதிப்பிற்கு ஆளாகலாம். இயற்கையான முறையில் உங்கள் சர்க்கரை அளவினை நீங்கள் குறைக்கும் பொழுது உங்கள் உடல் கூடுதல் பாதுகாப்பு பெறுகின்றது. இன்றைய மனித சமுதாயம் தன் முயற்சி என்பதனை உடல் ஆரோக்கியத்தில் அதிகமாய் தவற விட்டு விடுகின்றனர். குறிப்பாக உணவுவிஷயத்தில் அதிகம் தவற விட்டு விடுகின்றனர் எனறே தெரிகின்றது. திரும்ப, திரும்ப வலியுறுத்த விரும்புவது முறையான உணவுப் பழக்கம் உங்களை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைக்கும் என்பது தான்.

இன்னொரு செய்தி.

“நொறுங்க தின்றால் நூறு வயது” இதனை உண்மையாய் எத்தனை பேர் பின்பற்றுகின்றோம். இன்றிலிருந்து ஒவ்வொரு பிடி உணவினையும் நன்கு மென்று கூழாய் உண்ணுங்கள். இது ஒன்றே பல தீர்வுகளைத்தரும். ஆக மருத்துவம் என்பது நாம் முறையாய் வாழும் பொழுது கூட ஏற்படும் பிரச்சினைகளுக்கு மட்டுமே என்று இருந்தாலே சரியாய் இருக்கும் இல்லையெனில் மனிதன் தன் வாழ்வு முறையில் செய்யும் தவறுகளுக்கெல்லாம் மருந்து தான் தீர்வு என்று வாழ்ந்தால் நிரந்தர நோயாளியாகத்தான் வாழ வேண்டும்.

பூண்டு :

இதனை அநேகரும் சமையலின் ஒரு முக்கிய பங்கு என்றே நினைத்திருக்கின்றனர். நம் முன்னோர் நமக்கு செய்த பல்வேறு நன்மைகளில் ஒன்று சமையலில் பூண்டு, மஞ்சள், இஞ்சி போன்றவற்றினை அன்றாடம் சேர்த்ததுதான். ஏன் என்று விளக்கப்படாமல் செய்த நன்மைகளில் ஒன்று பூண்டு. இது சிறந்த மருத்துவர் பயனைத் தருகின்றது என்பதை சமீப காலமாக பல்வேறு வழிகளில் மருத்துவ உலகம் வலியுறுத்தி வந்தாலும் முழுமையாய் அறிந்தால் முறையாய் பயன் படுத்தலாம் என்பதனால் இதனை எழுதுகின்றோம். பாரம்பரிய வைத்திய முறையில் இதனை பற்றி கூறப்பட்டிருந்தாலும் பூண்டினைப்பற்றி விஞ்ஞான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* ஆஸ்துமாவிற்கு நிவாரணம்- சுருக்கிய மூக்கினை எளிதாக்கி மூச்சினை திணறல் இன்றி இருக்கக் செய்யும்
* வலிப்பு நோய்க்கு நிவாரணம் – பூண்டினை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வலிப்பு நோயின் தீவிரமும், அடிக்கடி ஏற்படும் தாக்குதலுக்கு குறையும்.
* கிருமி நாசினி- சுவாச மண்டலம், ஜீரண மண்டலம் இவைகளில் உள்ள கிருமிகளை வெகுவாய் நீக்கும்.

* வலி நிவாரணம் தரும்- இழுத்து பிடிக்கும் வலிகள் குறிப்பாக வயிற்றில் தோன்றும் வலிகளுக்கு நிவாரணம் தரும்.
* வயிற்று குடல் பூச்சிகளை கொல்லும்.
* வயிற்றிலுள்ள காற்றினை நீக்கும்.
* உடலின் உஷ்ணத்தின் மூலம் வியர்க்கச்செய்யும். இதனால் இரத்த ஓட்டம் சீராகும்.

* சீரண சக்திக்கு உதவுகின்றது.
* கிருமி நாசினி
* சிறு நீர் முறையாய் வெளியேற உதவுகின்றது.
* மாதவிலக்கு முறையாய் நிகழ் உதவுகின்றது.
* சளி வெளியேற உதவுகின்றது.

* சக்தி தருவது.
* எய்ட்ஸ் நோயாளிகள் தினமும் சிறிது பூண்டு உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.
* இருதய ரத்த குழாய் அடைப்புகளுக்கு சிறந்தது.
* ரத்தம் கட்டி சிறு சிறு உருண்டைகளாக மாறுவதை தவிர்க்கின்றது.

* புற்று நோய் உடையோருக்கு பலவித சிகிச்சைகள் அளிக்கும் பொழுது பக்க விளைவுகள் இல்லாதிருக்க குறைய பூண்டு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
* சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர்.
* ரத்த கொதிப்பு உடையோர் 1-2 பல் பூண்டு தினம் பயன்படுத்துவது ரத்தக் கொதிப்பினை கட்டுப்படுத்தும்.
* கெட்ட கொழுப்பு கரையும்.

கி.மு.200ல் இருந்தே பூண்டு மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.மு. 1550 ஆண்டுகளில் எகிப்து நாடுகளில் இருதய பாதிப்பு, பூச்சி கடி இவற்றுக்கு பூண்டினையே பயன்படுத்தி உள்ளனர். கி.மு.900களில் சளி, இருமல் இவற்றுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தி உள்ளனர். சோர்வை நீக்கும் டானிக்காகவும் பயன்படுத்தி உள்ளனர். சமீபத்தில் விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் ரத்த குழாய் அடைப்புகளை நீக்க வல்லது எனவும், கெட்ட கொழுப்பினை நீக்கி ரத்தத்தினை மெளிதாக்கி ரத்த ஓட்டத்தினை சீர் செய்வதாகவும் கண்டு பிடித்துள்ளனர். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் வெகுவாய் மட்டுப்படுவதாக கண்டு பிடித்துள்ளதால் மருத்துவ உலகில் இது அனைத்து முறை மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகின்றது.

இதனை உண்பதற்கு அளவு இருக்கின்றது. பலர் 4-5 பல் பூண்டினை காலையில் பச்சையாக மென்று சாப்பிடுகின்றனர். ஆனால் இதனை சமையலில் சேர்த்து சாப்பிடுவதே எளிதான முறையாக கூறப்படுகின்றது. சமைப்பதால் இதன் மருத்துவ குணங்களை இது இழப்பதில்லை என்பதாலும், செரிமானத்திற்கும் உண்பதற்கு எளிதானது என்பதாலும் இவ்வாறு கூறப்படுகின்றது.