உடலுறவில் ஆண்கள் ஈடுபடும் போது, ஆண்களின் விந்தணுவில் இருக்கும் மரபணுவிற்கும், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் தொடர்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
ஆண்களின் முறையற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடல் பருமன், தொடர்ந்து அலைபேசியில் பேசுதல் போன்றவைகள் ஆண்களின் மரபணுவை பாதிக்கின்றது.
பொதுவாக ஆண்களின் விந்தணுவில் உள்ள டி.என்.ஏ மூலக்கூறுகள் நிறம், குணம், தோற்றம் ஆகிய பண்புகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
எனவே அந்த ஆண்களை சேர்ந்த சந்ததியினர்களின் இனப்பெருக்கத்தின் போது அவர்களின் பண்புகளையே கொண்டிருப்பார்கள்.
ஆண்களின் தற்போதைய சூழ்நிலை, வாழ்க்கை முறை, தனி மனிதனின் குணங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து அந்த ஆண்களின் அடுத்த சந்ததியை நிர்ணயிக்கின்றன.
எனவே மன அழுத்தத்தினால் ஆண்களின் விந்தணு உற்பத்திகள் பாதிக்கப்பட்டு, அவர்களின் அடுத்த சந்ததிகளுக்கும் இந்த பாதிப்புகளை ஏற்படுகிறது.