Home இரகசியகேள்வி-பதில் பிறப்புறுப்பு வறட்சி பற்றி கேள்விகளும் பதில்களும்

பிறப்புறுப்பு வறட்சி பற்றி கேள்விகளும் பதில்களும்

79

wife,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor,emy jackson hot,Radika apte hot ,south indian sex,sexual addiction,sex kelvi pathilpaliyal kelvi pathil,girls kelvi pathil, Low Sex Drive In Womennanpanin manaivi,பிறப்புறுப்பு வறட்சி என்பது என்ன? (What is vaginal dryness?)

பிறப்புறுப்பு வறட்சி என்பது எந்த வயதுள்ள பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் பொதுவாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள பெண்களில் 5.8% முதல் 19.7% வரையிலான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இதில் 5.6 முதல் 26.4% பெண்கள் பிறப்புறுப்பு வறட்சியை ஒரு தொந்தரவாகக் கருதுகிறார்கள்.
பிறப்புறுப்பு வறட்சியானது, உடலுறவின் இன்பத்தையும் அதற்கான ஆசையையும் பாதிக்கலாம்.

பிறப்புறுப்பு வறட்சி எதனால் ஏற்படுகிறது? (What causes vaginal dryness?)
பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவால், பிறப்புறுப்பின் அமிலத்தன்மை, வழவழப்புத் தன்மை மற்றும் நெகிழ்தன்மை ஆகியன பாதிக்கப்படுகின்றன.
உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதே, பிறப்புறுப்பு வறட்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பல காரணங்களால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையலாம், அவற்றில் சில:
மாதவிடாய் நிறுத்தம்
மாதவிடாய் நிற்பதற்கு சற்று முன்புள்ள காலம்
அவஃபரெக்டமி அறுவை சிகிச்சை – அறுவை சிகிச்சையின் மூலம் அண்டகங்களை
அகற்றுதல்
போதிய பாலியல் கிளர்ச்சியின்மை
கவலை
குழந்தை பிறப்பு
தாய்ப்பாலூட்டுதல்
அதிகம் புகைபிடித்தல்
புற்றுநோய்க்கான (அண்டகங்களைப் பாதிக்கக்கூடிய) கீமோதெரபி
ஈஸ்ட்ரோஜனைப் பாதிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்
பிறப்புறுப்பை நீர் பீய்ச்சியடித்துக் கழுவும் பழக்கமுள்ள சில பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படலாம்.

எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும்? (When to seek medical care?)

பிறப்புறுப்பு வறட்சியால் உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தினால், அது உங்கள் பாலுறவு வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பாதித்தால், அப்போது சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

பிறப்புறுப்பை அதிகமாக நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதலைத் தவிர்த்தல், வாசனை திரவியம் கலந்த சோப்புகளைத் தவிர்த்தல், பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் ஃபோர் பிளே-க்கு அதிக நேரம் செலவிடுதல் (இதனால் பார்த்தோலின் சுரப்பி நன்கு வேலை செய்து அதிக வழவழப்பு கிடைக்கும்) போன்ற பொதுவான சில நடவடிக்கைகள் பிறப்புறுப்பு வறட்சியைத் தவிர்க்க உதவலாம்.

மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கலாம்:
குறிப்பிட்ட பகுதிக்கான ஈஸ்ட்ரோஜன்: குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் (பிறப்புறுப்பிற்குள் செலுத்திக்கொள்ள வேண்டும்), கிரீம்கள் அல்லது மருந்துக் குச்சி (பெசரி) ஆகியவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த ஈஸ்ட்ரோஜன் பிறப்புறுப்புப் பகுதியில் செயல்பட்டு பிறப்புறுப்பின் pH-ஐ சீராக வைக்கும், பாக்டீரியாவையும் கட்டுப்படுத்தி வறட்சியைக் குறைக்கும்.

வழவழப்பு மருந்துகள்: ஈஸ்ட்ரோஜன் மாற்றும் முறையைப் பயன்படுத்த முடியாத பெண்களுக்கு, வழவழப்பைக் கொடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். உடலுறவில் ஈடுபடுவதற்கு சற்று முன்பு இதனைப் பூசிக்கொள்ள வேண்டும். உதாரணங்கள்: KY ஜெல்லி, பிறப்புறுப்புக்குப் பயன்படுத்தக்கூடிய மாஸ்டுரைசர்கள் (கடைகளில் கிடைக்கும்) மற்றும் வேசலின் போன்ற பெட்ரோலியப் பொருள் சார்ந்த தயாரிப்புகள்