மட்டன் ரோகன் ஜோஸ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவாகும். இது அங்கு மிகப் பிரபலமான பாரம்பரியமான உணவாகும். இந்த ரெசிபியை காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது.
இதனை வீட்டில் விருந்தினர் வரும்போது செய்தால், அவர்களது மனம் திருப்திகரமாக சாப்பிட்ட உணர்வை வெளிக்காட்டுவார்கள். இந்த மட்டன் ரோகன் ஜோஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2
தயிர் மசாலாவிற்கு :
கெட்டியான தயிர் – 3/4 கப்
குங்குமப்பூ -சிறிதளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
நசுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு :
எண்ணெய் – 3 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
இலவங்கப்பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 5
கருப்பு ஏலக்காய் -2
பச்சை ஏலக்காய் – 5
சீரகம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து மசாலா, கறியுடன் சேர 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
தயிர் மசாலா கலவை தயாரிக்க:
ஒரு கிண்ணத்தில் தயிர், குங்குமப்பூ, மிளகாய்த்தூள், தனியா தூள், சோம்புத்தூள், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர், மசாலா கலந்து வைத்த மட்டன் கலவையை போட்டு கறியை பொன்னிறமாக வதக்கி விட்டு 5 நிமிடங்கள் கடாயை மூடி போட்டு வேக வைக்கவும்.
பிறகு, மூடியை எடுத்து விட்டு தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு 45 நிமிடங்கள் தண்ணீர் சுண்டி கிரேவி போல் வருமாறு வேக வைக்கவும்.
இறுதியாக கறி வெந்ததும் கரம் மசாலா மற்றும் மணக்கும் கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு சாதத்துடன் பரிமாறலாம்.
வித்யாசமான சுவையில் மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி!