Home ஆரோக்கியம் தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில வழிகள்

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில வழிகள்

33

1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான்

உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க ளுடன் பேசி, அவர்களுக்கு நீங்கள் சொல்ல‍விரும்பும் கருத்தைப் புரிய வைக்க‍ முடியும்.

2. நீங்கள் பேசும்போது உங்களுக்கு எதிரே இருப்ப‍வர்கள், முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்க ள். அப்போது தான் உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நீங்கள் பேச விரும்பியதை பேசமுடியும், அ தைப்போல அவர்கள்பேசி நீங்கள் கேட்கும்போது அவர்களை சிறந் த அறிவாளிகளாக எண் ணிக்கொள்ளுங்கள் ஏனெ ன்றால், பிறர் பேசுவதில் உ ள்ள‍ நல்ல‍ கருத்துக்களும் உங்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க‍ க் கூடும் ஆகையால் அவர் கள் பேசுவதை அலட்சியம் செய்யாமல், அறிவுப்பூர்மான அவர்க ளது பேச்சைக் கேளுங்கள்.

3. எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்களுக்குத் தேவையான விவ ரங்களைக் கேட்கச்செல்லும்போது அ ங்கு நீங்கள் கேட்கவிரும்பியதை கேட் காமல் தயங்கி தயங்கி நிற்கக் கூடாது.

4. எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், அங்கே உங்களது நடையின் வேகத்தை க் கூட்டுங்கள். அங்கே நிமிர்ந்து நில்லுங்கள். பிறரை பார்த்துப் பேசும்போது அவர்களது கண்களைப் பார்த்துப் பேசுங்கள்

5. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங் கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கு ம் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொ ள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித் தாலும் தான், நான் அழகு என்று நினை ப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்க ளே ரசியுங்கள்.

6. எந்த மொழி சரளமாக பேச முடிய வில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலரு க்கு அவரவர் தாய் மொழி யையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

7. உங்களால் எது முடியாது. உங்க ளுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை வி ரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய் யுங்கள்.

8. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அ மைவதில்லை என்பதே உண்மை .

9. உங்களுக்கு எதுவும் தெரியா து. எதிரில் நிற்பவருக்கு எல்லா மே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ண ம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

10. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத் துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரி ந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள் விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

11. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வர ப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங் கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்துவிட்டு முன் செல் லுங்கள்.

12. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிரா கரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில் லை, நிராகரித்தவருக்கே என்பதை புரி ந்துக்கொள்ளுங்க ள்.

13. மாற்றத்தை வெளியில் தேடாமல் உங் களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மை யை எளிதில் போக்கி விடலாம்.