Home உறவு-காதல் பிரியமானவரை சீண்டுங்கள்… உடம்புக்கு நல்லதாம்….

பிரியமானவரை சீண்டுங்கள்… உடம்புக்கு நல்லதாம்….

21

காதல் விளையாட்டு அல்லது சரசமாடுவதில் யார் கில்லாடியோ அவர்கள்தான் அனைவருக்கும் பிடித்த நபர்களாக இருப்பார்களாம். ஆய்வு சொல்கிறது.

காதல் துணையுடன் சீண்டி விளையாடுவதில், கொஞ்சுவதில், காதல் மொழி பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் பெண்களுக்கும் நிறையவே பிடிக்குமாம்.

விதம் விதமாக சீண்டி விளையாடுவோரை மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாகவும் அது நிறைய நல்லது செய்கிறதாம். உடம்பையும், மனசையும் இது ரிலாக்ஸ் ஆக்குகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.

சரி எப்படியெல்லாம் சீண்டி விளையாடலாம் என்று ஆய்வு செய்து அதை வெளியிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

பார்வை.. இது ஒரு வகையான காதல் மொழி. பார்வையிலேயே பலர் மடக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான். வெறும் பார்வையிலேயே ஒருவரை நம் வசப்படுத்த முடியும். அப்புறம் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே என்று காதல் பாடல் பாடுவார் உங்கள் காதலி.

ஒருவரை பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அவரைப் பாருங்கள்.. அதாவது கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராக.. ஒருமுறை அல்ல, 3 முறை அடுத்தடுத்து அவரைப் பாருங்கள். நான் உன்னைப் பார்க்கிறேன் என்று அவருக்கு இது உணர்த்தும்.

நீங்கள் இப்படிச் செய்தால், அவர் நிச்சயம் உங்களைத் திரும்பிப் பார்ப்பார். அந்த ரிட்டர்ன் பார்வையின் நேரத்தை வைத்து அவர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை அறியலாம். அதாவது சராசரியாக 1.18 விநாடிகள் அவர் பார்க்கிறார் என்றால் அது சாதாரணப் பார்வையாகும். அதுவே 2 அல்லது 3 விநாடிகளுக்குப் போகிறது என்று வையுங்கள், அவர் உங்களை ரொமான்டிக் லுக் விடுகிறார் என்று பொருளாம்.

அதேபோல செக்ஸியான பேச்சுக்கள், மெசேஜ், புகைப்படங்கள் அனுப்புவது இன்னொரு வகையான சீண்டல். இதை டீன் ஏஜ் வயதுள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது எல்லோரும் இதைச் செய்கிறார்களாம்.

18 முதல் 29 வயது வரை ஜாஸ்தி
இருப்பினும் செக்ஸடிங் போன்றவற்றை18 முதல் 29 வயது வரையிலானவர்களே அதிகம் செய்வதாக பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க அமைப்பு சொல்கிறது. இதற்காக அவர்கள் 2252 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர்.

செக்ஸியான படம் அனுப்புறாங்க
இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேருக்கு நிர்வாணமான, செக்ஸியான புகைப்படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினார்களாம் அவர்களை விரும்பியவர்கள். அதேசமயம், 13 சதவீதம் பேர் தாங்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு செக்ஸியான படம் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர்.

இப்படிப்பட்ட காதல் சீண்டல்கள், கிண்டல்கள், கொஞ்சல்கள், குலாவல்கள் உடம்புக்கும் நல்லது என்று சொல்கிறது ஆய்வு. குறிப்பாக இப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு உடம்பில் ரத்த வெள்ளை அணுக்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருக்குமாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்குமாம்.