Home உறவு-காதல் உங்களது காதலர் போஸ்சஸிவாக இருப்பது தவறா?

உங்களது காதலர் போஸ்சஸிவாக இருப்பது தவறா?

33

உங்கள் காதலனின் போஸ்சஸிவ்னஸை அறிந்து கொள்வதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன

உங்களது காதலர் போஸ்சஸிவாக இருப்பது தவறா? அப்படி பார்த்தால் நாம் அனைவருமே போஸ்சஸிவாக தான் இருக்கிறோம். காதலின் சில நிலைகளை தாண்டும் வரை இந்த போஸ்சஸிவ்னஸ் இருக்கதான் செய்யும். இது எங்கே நீங்கள் அவரை விட்டு போய்விடுவீர்களோ என்ற பாதுகாப்பு இன்மையால் வருவது. உங்களுக்கே அவர் உங்கள் மீது போஸ்சஸிவாக இருப்பது மிகவும் பிடிக்கும். உங்கள் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்படுவீர்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் காதலனால் உயிர்வாழ முடியாது என்ற நிலை உங்களை உற்சாகத்தின் உச்சதிற்கே அழைத்து செல்லும். ஆம், உங்கள் மீது கொண்ட அதீத காதலினால் தான் உங்கள் காதலன் உங்களிடம் போஸ்சஸிவாக நடந்து கொள்கிறார். இது சில சமயம் மகிழ்ச்சியாக இருந்தாலும், பல நேரங்களில் உங்களை கட்டுப்படுத்துவது போல் தோன்றும்.

அவ்வாறு உங்கள் காதலன் நடந்து கொள்வது உங்கள் மீது காதலின் பெயரில் என்பதால், அவரின் பாதுகாப்பின்மையை போக்க வேண்டியது உங்களின் கடமை. எனவே அவரை இன்னும் அதிகமாக காதலியுங்கள். இதோ இந்த சில அறிகுறிகளை வைத்து உங்கள் காதலன் உங்கள் மீது போஸ்சஸிவாக இருக்கிறார் என நீங்கள்

நண்பர்களுடன் வெளியே செல்ல தடை நீங்கள் எப்போது எல்லாம் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்புகிறீகளோ அப்போது எல்லாம், நான் உன்னை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறுவார்.

புதிய அனுபவம் உங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொள்வார். உங்களை எந்த ஒரு புதிய விஷயத்தையும் தனியாக செய்யவிடமாட்டார். உங்கள் வாழ்க்கை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது அவர் தான் வந்து காப்பாற்ற வேண்டும் என்பதை போல நடந்து கொள்வார். இதனால், எப்போதாவது நீங்கள் புதிய விஷயங்களை செய்ய நேர்ந்தால், அவர் இல்லாமல் தத்தளித்து போய்விடுவீர்கள்.

கோபம் நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை செய்தால் கூட அவருக்கு அதிகமாக கோபம் வரும். முக்கியமாக அதில் ஒரு ஆண் சம்பந்தப்பட்டிருந்தால் அவ்வளவு தான் உங்கள் கதை முடிந்தது.

அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் நீங்கள் அற்பமாக நினைக்கும் ஒரு விஷயத்தை பற்றி பேசவே வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்லும் வரை கோபமாகவோ அல்லது சலிப்புடனோ இருந்து உங்களிடம் இருந்து எல்லா தகவலையும் கறந்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்

கடவுச்சொற்கள் உங்களது அனைத்து கடவுச்சொற்கள் மற்றும் உங்களுடைய அனைத்து இரகசியங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பார். அவருக்கு வேண்டியது கிடைக்கும் வரை உங்களை நிம்மதியாக விடமாட்டார்.

போனை எடுத்து பேசியே ஆகனும் நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் சரி, யாருடன் போனில் பேசிக்கொண்டு இருந்தாலும் சரி, அவரது போன் வந்தால் கட்டாயம் எடுத்து பேசியே ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் அவரது அழைப்பை தவிர்த்து விட்டால், நீங்கள் அவரையே தவிர்கிறீகள் என்றோ அல்லது நீங்கள் நல்ல காதலி இல்லை என்றோ முடிவுகட்டிவிடுவார்.

கட்டுப்படுத்துதல் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போது அவரிடம் கட்டாயம் அனுமதி பெற்றுக்கொண்டு போக வேண்டும் நினைப்பார்.

நண்பர்களை நம்பாதே உங்களது நண்பர்களை நம்பாதே என்று கூறுவார். அதுவும் ஆண் நண்பர்கள் என்றால் சொல்லவா வேண்டும்.

இடைவெளி இருவருக்கும் இடையில் இடைவெளி இருப்பதை விரும்பமாட்டார். கட்டாயம் உங்களது ஒவ்வொரு செயலிலும் அவர் இடம்பெற்றிருக்க வேண்டும் என நினைப்பார். உங்களுக்கு பிடித்ததை கூட தனியாக செய்ய தடைவிதிப்பார்.

உலகமே நீங்கள் தான் அவரது உலகமே நீங்கள் தான் என்று நினைப்பார். அதே போல நீங்களும் நினைக்க வேண்டும் என வலியுறுத்துவார்.

அவரையும் அழைத்து செல்ல வேண்டும் நீங்கள் என்ன தான் காதலித்தாலும் சரி, உங்கள் நட்பு வட்டாரத்தை பார்க்க போனால் நானும் வருவேன் என வந்துவிடுவார். அதிலும் உங்கள் நட்பு வட்டாரத்தில் ஆண் நண்பர்களும் அடங்கியிருந்தால், நிச்சயமாக உங்களை தனியே விடமாட்டார்.

உயர்வாக பேசுதல் நீங்கள் ஒருவரை பற்றி உயர்வாக பேசினால் அதை அவரால் தாங்கிகொள்ள முடியாது. நீங்கள் ஒவ்வொருமுறை உங்கள் நண்பர்களை பற்றி அல்லது குடும்ப உறுப்பினர்களை பற்றி உயர்வாக பேசும் போதும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே இருப்பார்.

உங்களது சோகம் அவரது சந்தோஷம் நீங்கள் உங்கள் நட்பு வட்டாரத்தவர்களால் கீழே தள்ளப்பட்டால் அல்லது ஏமாற்றப்பட்டால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார். ஆனால் கண்டிப்பாக வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். இந்த எல்லா விஷயங்களும் ஒருவர் கெட்டவர் என்றோ ஆபத்தானவர் என்றோ உறுதி செய்துவிடாது. ஆனால் அதிகமான போஸ்சஸிவ்னஸ் சில சமயங்களில் பெரிய பிரச்சனைகளை உண்டு செய்யும். சில பெண்களுக்கு தனக்கான சுதந்திரம் என்பது மிகவும் பெரிதாக தெரியும். சில பெண்கள் காதலனை சார்ந்தே வாழ்ந்துவிடலாம் என நினைப்பார்கள். இவை அனைத்தும் ஒரு ஆண் உங்களின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் விதமே… எனவே காதலை காதலால் சரி செய்வதே சிறந்தது